கேரளா, கர்நாடகாவை மீண்டும் மிரட்ட காத்திருக்கும் மழை!!
கேரளா, கர்நாடகாவில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது!
கேரளா, கர்நாடகாவில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது!
தென் மேற்கு பருவமழை மேற்கு இந்திய பகுதிகளில் மீண்டும் வலுப்பெற்று வருகிறது.
கேராளா மற்றும் கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் பல இடங்கள் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது. இந்நிலையில், கேரளா, கர்நாடகாவில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறுகையில்....!
கேரளா, கர்நாடகாவில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு அரபிக்கடலில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
தமிழகத்திலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென் மாநிலங்களில் இன்று முதல் மழை படிப்படியாக குறையும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, நெல்லை மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பும், தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு; சென்னையில் இரவில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுவரையில், கேரளா வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 164-ஐ எட்டியுள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தற்போது தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது!