இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் பார்வையிட்ட பின்னர் எவ்வித அச்சுறுத்தலையும் இந்தியக் கடற்படை எதிர்கொள்ளும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று மற்றும் இன்று இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் பார்வையிட்டார் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். பிறகு ஐஎன்எஸ் விக்ரமாதித்யா கப்பலில் இருந்து MiG 29K ரக போர் விமானத்தில் அவர் பயணித்தார். 


பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- கடந்த இரு நாட்களாக இந்தியக் கடற்படையை ஆய்வு செய்தேன். போர் விமானத்திலும் பயணம் செய்தேன். கடல் மார்க்கமாக எவ்வித அச்சுறுத்தலும் நமக்கு ஏற்படாது என்பதை இந்த ஆய்வுக்கு பின்னர் உறுதியாக சொல்கிறேன். மேலும் இந்தியக் கடற்படையை  நவீனமயமாக்குவதில் மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. எவ்வித அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளும் முழு வலிமையுடன் இந்தியக் கடற்படை திகழ்வதாகவும் கூறினார்.