இந்திய கடற்படைக்காக பிரான்ஸ் நிறுவனம் தயாரித்த ஸ்கார்ப்பியன் நீர்முழ்கி கப்பல் தொடர்பான ஆவணங்கள் ஆஸ்திரேலிய பத்திரிகையின் இணையதளத்தில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டி.சி.எஸ்.என் என்ற நிறுவனத்தின் வடிவமைப்பில் இந்தியாவில் 6 நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிக்க முடிவெடுக்கப்பட்டு, ஒரு கப்பல் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த கப்பல் இந்தியாவின் கடல் பாதுகாப்பில் முக்கிய ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அது தொடர்பான ஆவணங்கள் வெளியாகி உள்ளது. இந்திய பாதுகாப்புத்துறையை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நீர்மூழ்கி கப்பலின் அனைத்து பாதுகாப்பு அம்சங்கள், வடிவமைப்பு தகவல்கள், சென்சார்களின் எண்ணிக்கை, தாக்கும் திறன் என 2011-ம் ஆண்டிலிருந்து தப்போது வரையிலான கடற்படை ரகசியங்கள் குறித்த விபரம் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.  இதனால் இந்திய கடல்பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது. 



இந்த நிலையில், இதைக்குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறுகையில்:- கடற்படை ரகசியங்கள் வெளியான விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த கடற்படை தளபதியை கேட்டுக்கொண்டுள்ளேன். மேலும் இந்த ஆவணங்கள் கப்பலுடையதுதானா? என்பதை ஆய்வு செய்ய வேண்டியது முதல் நடவடிக்கை ஆகும். எனினும், 100 சதவீத விபரங்கள் கசியவில்லை. இந்தியாவில் இருந்து ஆவணங்கள் கசிந்ததாக தெரியவில்லை. ஹேக்கிங் செய்யப்பட்டு இருக்கலாம் என்று நாங்கள் கருதுகிறோம். இதை நாங்கள் விரைவில் கண்டறிவோம் என்று தெரிவித்துள்ளார்.