பஞ்சாப் மாநிலத்தின் 17வது முதலமைச்சர் பகவந்த் மான்! 11 ஆண்டு அரசியல் பயணம்...
பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. பஞ்சாப் மாநிலத்தின், 17வது முதல்வராக பகவந்த் மான் இன்று பதவியேற்றார்.
பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. பஞ்சாப் மாநிலத்தின், 17வது முதல்வராக பகவந்த் மான் இன்று பதவியேற்றார்.
பஞ்சாப் மாநிலத்தின் 117 சட்டமன்றத் தொகுதிகளில் 92 தொகுதிகளை கைப்பற்றி ஆம் ஆத்மி புதிய சாதனை படைத்து, பஞ்சாப்பில் 10 ஆண்டு காலமாக ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.
ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக பகவந்த் மானை சட்டமன்றத் தேர்தலில் களம் கண்டார். 2011-ம் ஆண்டு பஞ்சாபில் மக்கள் கட்சியில் இணைந்து அரசியல் பயணத்தை தொடங்கினார் பகவந்த் மான்.
வெறும் 11 வருட அரசியல் வாழ்க்கையில் பஞ்சாப் முதல்வர் நாற்காலியை பகவந்த் மான் அடைந்தது எப்படி?
சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங்கின் சொந்த கிராமமான கட்கர் கலனில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பகவந்த் மானுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
மேலும் படிக்க | பஞ்சாப் மாநிலத்தில் எந்த கட்சிக்கு பலம்?
நிகழ்ச்சியில், முதல்வர் பகவந்த் மான் மட்டுமே பதவியேற்றுள்ளார். விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும். பதவியேற்பு விழாவில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தவிர, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் பஞ்சாப் இணை-பொறுப்பாளர் ராகவ் சதா ஆகியோரும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.
பஞ்சாப் மக்கள் கட்சியில் இருந்து அரசியல் வாழ்க்கை தொடங்கியது
பிரகாஷ் சிங் பாதலின் மருமகனும் அப்போதைய நிதியமைச்சருமான மன்பிரீத் சிங் பாதல் மார்ச் 2011 இல் பஞ்சாபில் மக்கள் கட்சியை உருவாக்கியபோது, பகவந்த் மான் அரசியலில் களம் இறங்கினார்.
PPP இன் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான பகவந்த் மான், பிப்ரவரி 2012ம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் பிபிபி வேட்பாளராக லெஹ்ராகாகா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
பகவந்த் மான் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்
சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை, அதன் பிறகு மன்பிரீத் சிங் பாதல் காங்கிரஸில் சேரத் தயாராகிவிட்டார். மறுபுறம், பகவந்த் மான் காங்கிரஸில் சேராமல் வேறு பாதையைத் தேர்ந்தெடுத்து 2014 ஆம் ஆண்டில் ஆம் ஆத்மி கட்சியில் (Aam Aadmi Party) சேர்ந்தார்.
ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து 2 மக்களவைத் தேர்தல்களிலும் வெற்றியை பதிவு செய்தது.
மேலும் படிக்க | ஆட்சி அமைக்க உரிமை கோரும் பகவந்த் மான்..
2014 மக்களவைத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் அமோக ஆதரவைப் பெற்றது மற்றும் அக்கட்சி பகவந்த் மான் தொகுதி உட்பட நான்கு இடங்களை வென்றது.
இந்தத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளரான பகவந்த் மான், சங்ரூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றார். இதற்குப் பிறகு, 2019 மக்களவைத் தேர்தலில் பகவந்த் மான் வெற்றி பெற்றார்.
பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மியின் வரலாற்று வெற்றி
ஆம் ஆத்மி கட்சி இம்முறை நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பகவந்த் மானை முதல்வராக்கி சரித்திர வெற்றியைப் பதிவு செய்தது. பஞ்சாபில் உள்ள 117 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்று மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றது.
டெல்லிக்கு பிறகு ஆம் ஆத்மி கட்சி ஆளும் கட்சியாக உருவெடுத்திருக்கும் மாநிலம் பஞ்சாப் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | பஞ்சாப் தேர்தலில் படுதோல்வி...பதவி விலகிய சித்து
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR