சினிமா பானியில் Train-னை நிறுத்திய கிராமவாசி!

பர்ட்வானில் தண்டவாளத்தில் ஏற்பட்ட கோளாரு காரணமாக நிகழவிருந்த விபத்தினை, சினிமா பானியில் தடுத்த உள்ளூர்வாசி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
மேற்கு வங்காளம்: பர்ட்வானில் தண்டவாளத்தில் ஏற்பட்ட கோளாரு காரணமாக நிகழவிருந்த விபத்தினை, சினிமா பானியில் தடுத்த உள்ளூர்வாசி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
மேற்கு வங்காள மாநிலம் பர்ட்வானில், ஹவுரா - புது தில்லி தொடர்வண்டி பாதையில் கோளாரு ஏற்பட்டது. இதனை அறியாது அப்பாதையினில் தொடர்வண்டி வந்த நிலையில் உள்ளூர் கிராமவாசி ஒருவர், சிவப்பு துணியை காட்டி தொடர்வண்டியை நிறுத்தியுள்ளார்.
இதனால் விபத்துக்குள்ளாக இருந்த தொடர்வண்டியும், அதில் பயணித்த ஆயிரக்கணக்கான பயணிகளும் காப்பாற்றப் பட்டனர்!