டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் ‘இந்த’ வாகனங்களுக்கு எண்ட்ரி இல்லை: NHAI
Delhi-Mumbai Expressway: டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயின் முடிக்கப்பட்ட முதல் பகுதியான டெல்லி-தௌசா-லால்சோட் பிரிவினை பிப்ரவரி 12 அன்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
டெல்லி-மும்பை விரைவுச்சாலை: டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயின் சமீபத்தில் தொடங்கப்பட்ட பிரிவில் சில வாகனங்கள் நுழைவதை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தடை செய்துள்ளது. டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயின் புதிய பிரிவு 1-ல், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள், மூன்று சக்கர வாகனங்கள், மோட்டார் பொருத்தப்படாத வாகனங்கள் மற்றும் டிரெய்லர்கள் அல்லது டிரெய்லர்கள் இல்லாத டிராக்டர்கள் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்களுக்கு நுழைவிற்கு தடை விதித்துள்ளது.
தடைக்கான காரணத்தை அறிவித்த NHAI
NHAI இதற்கான அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பில், "அதிவேக வாகனங்களின் இயக்கம், ஒப்பீட்டளவில் மெதுவாக நகரும் வாகனங்களான இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் மோட்டார் அல்லாத வாகனங்கள் போன்ற மெதுவாக நகரும் வாகனங்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்" என கூறப்பட்டுள்ளது.
டெல்லி-மும்பை விரைவுச்சாலை அதிவேக நெடுஞ்சாலையாக உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு வகையான மோட்டார் வாகனங்களுக்கான அதிகபட்ச வேக வரம்புகள் அதிவேக நெடுஞ்சாலைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது மணிக்கு 80 கிமீ / மணி முதல் 120 கிமீ / மணி வரை என்ற அளவில் உள்ளது. இந்த அதிவேக நெடுஞ்சாலையின் அபிவிருத்திக்கு முன்னர், இடங்களை இணைக்க/வெவ்வேறு இலக்குகளை அடைய மாற்று வழிகள் மற்றும் சாலைகள் பொதுமக்களுக்கு இருந்தன என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்த பிரிவு
டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயின் முதல் முடிக்கப்பட்ட பகுதியான டெல்லி-தௌசா-லால்சோட் பிரிவினை பிப்ரவரி 12 அன்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயின் 246 கிமீ டெல்லி-தௌசா-லால்சோட் பிரிவு ரூ.12,150 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிக நீளமான விரைவுச்சாலை
டெல்லி-மும்பை விரைவுச்சாலை 1,386 கிமீ நீளம் கொண்ட இந்தியாவின் மிக நீளமான விரைவுச்சாலையாக இருக்கும். டெல்லிக்கும் மும்பைக்கும் இடையிலான பயண தூரத்தை 1,424 கி.மீ லிருந்து 1,242 கி.மீ ஆக 12 சதவீதம் குறைத்துள்ளதோடு, பயண நேரத்தை 24 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக 50 சதவீதம் அளவு குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இது டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய ஆறு மாநிலங்களைக் கடந்து கோட்டா, இந்தூர், ஜெய்ப்பூர், போபால், வதோதரா மற்றும் சூரத் போன்ற முக்கிய நகரங்களை இணைக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ