ஒகி புயலில் சிக்கியவர்களை மீட்பில் முனைப்பு தேவை - கேரள மக்கள்!
ஒகி புயலில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் முனைப்பு தேவை என கேரள மக்கள் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர்!
ஒகி புயலில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் முனைப்பு தேவை என கேரள மக்கள் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர்!
தென்மேற்கு பருவ மழையானது மேற்கு திசையில் 230 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டதை அடுத்து கடந்த 3 நாட்களாக கடுமையாக புயல் சூழ்ந்து வருகிறது.
இந்நிலையில் இன்று காலை மழை சற்று கடுமையாக இருந்து, மழைக்குப் பின் தண்ணீர் தேக்கம் ஏற்பட்டு வறட்சி நீங்கி நீர்நிலைககளில் நீர் மட்டம் உயர்ந்து காணப்படுகிறது.
தற்போது ஒகி புயல் காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளதால் போக்குவரத்துக்கு நெறிசல் ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர். கடற்படை மற்றும் கடலோரக் காவர் படையினர் பாதிக்கபட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரளா மற்றும் தமிழ்நாட்டில் ஒகி புயலால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். தெற்கு கடற்கரை பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. திருவனந்தபுரத்தில் உள்ள கடற்படை மற்றும் கடலோரக் காவலர்கள் மூலம் ஒகி புயலிலிருந்து இதுவரை 400 பேர் மீட்கப்பட்டனர். எனினும் முழுமையான மீட்பு பணியில் மீதம் உள்ளவர்களையும் மீட்க வேண்டும் என கேரளா மக்கள் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர்.