புதுடெல்லி: ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000  நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8-ம் தேதி அறிவித்தார். ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000 நோட்டுகளை அடுத்த மாதம் டிசம்பர் 30-ம் தேதி வரை வங்கிகளில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள், தபால் நிலையங்கள் மூலம் நேற்று ரூ.2000 புதிய நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளது. இன்று மூன்றாவது நாளாக வங்கிகளுக்கு மக்கள் படையெடுத்தனர். ஒரு நாளைக்கு 4000 ரூபாய் அளவுக்கு மட்டுமே மாற்ற முடியும் என்று கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளதால் இன்றும் வங்கிகளில் கூட்டம் காணப்பட்டது. இது தவிர வங்கிகளில் நிறைய பேர் ரூ.500, ரூ.1000 பழைய நோட்டுகளை கொண்டு வந்து டெபாசிட் செய்தனர். மேலும் நேற்று முதல் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டார்கள் என்று கூறப்பட்டிருந்தது.  


இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் மந்திரி அருண் ஜெட்லி நிருபர்களீடம் கூறியபோது நாட்டில் புழக்கத்தில் உள்ள 86 சதவீத ரூபாய் நோட்டுக்களை மாற்றும் மிகப்பெரிய பணி நடைபெற்று வருகிறது. மேலும் இதற்காக வங்கி ஊழியர்கள் காலை முதல் இரவு வரை வேலை செய்கின்றனர். பொதுமக்களும் சிரமங்கள் இருந்தாலும் ஒத்துழைப்பு நல்கி வருகின்றனர்.


நாடு முழுவதும் உள்ள 2 லட்சம் ஏ.டி.எம்.-களில் புதிய ரூபாய் நோட்டுக்களை விநியோகம் செய்யும் வகையில் அளவுத்திருத்தம் செய்வதற்கு 2 வாரங்கள் வரை ஆகலாம்.


ரூபாய் நோட்டு மாற்றம் மற்றும் பணப் பரிமாற்றத்தை நிதி அமைச்சகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இன்று மதியம் வரை 2 கோடியே 28 லட்சம் பேர் பணப் பரிவர்த்தனை செய்துள்ளனர். 


ஸ்டேட் வங்கியில் மட்டும் கடந்த இரண்டு தினங்களில் சுமார் 2.28 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ன. அனைத்து வங்ககளிலும் செய்யப்படும் மொத்த டெபாசிட் 2 கோடி ரூபாய் முதல் 2.25 லட்சம் கோடி வரை இருக்க வேண்டும். 


இவ்வாறு மத்திய நிதித்துறை மந்திரி அருண் ஜெட்லி பேட்டி அளித்தார்.