புது டெல்லி: வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட வன்முறை மற்றும் பதட்டமான சூழல் நான்காவது நாளான இன்று அமைதி வழிக்கு திரும்பி வருகிறது. இந்த வன்முறையில் இதுவரை 18 பேர் இறந்துள்ளனர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 200 க்கு மேல் எனக் கூறப்படுகிறது. டெல்லி வன்முறையில் காயமடைந்த டி.சி.பி ஷாஹத்ரா அமித் ஷர்மாவின் உறவினர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார் மற்றும் அவரது உடல்நிலை குறித்து விசாரித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குரு தேக் பகதூர் (ஜிடிபி - Guru Tegh Bahadur Hospita) மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், இறந்த 4 பேரின் உடல் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டன எனக் கூறினார். டெல்லி வன்முறையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது என ANI ஊடகம் தெரிவித்துள்ளது.


டெல்லி காவல்துறை சிறப்பு ஆணையர் சதீஷ் கோல்ச்சா கூறுகையில், மெட்ரோ நிலையத்திலிருந்து போரட்டக்காரர்கள் விலகியுள்ளனர். மவுஜ்பூர் சவுக் பகுதியில் அமைதியாக உள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைவரும் 66 புட்டா சாலையில் இருந்து அகற்றப்பட்டுள்ளனர் எனக் கூறியுள்ளனர்.


 



ஜாபராபாத் மெட்ரோ நிலையத்தில் போராட்டம் நடத்தி வந்த போராட்டக்காரர்கள் நேற்று இரவு மெட்ரோ நிலையத்திலிருந்து விலகி சென்றனர். 


 



மவுஜ்பூர், சீலம்பூர் மற்றும் கோகுல்பூரியின் சமீபத்திய புகைப்படங்கள். ஏராளமான பாதுகாப்புப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர்.