நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலையில் துவக்கம்!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற ஜூலை 18 ஆம் தேதி தொடங்குகிறது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற ஜூலை 18 ஆம் தேதி தொடங்குகிறது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடத்துவது குறித்து இன்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ரயில்வேதுறை அமைச்சர் பியூஷ்கோயல், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஆனந்தகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர்கலந்து கொண்டனர்.
இதையடுத்து, ஆலோசனை முடிவில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற ஜூலை 18 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.