பெட்ரோல், டீசல் விலை ஜிஎஸ்டி வரிக்குள் வரவில்லை: ராகுல் தாக்கு!
பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்!
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உயர்வால் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.
முன்னதாக, நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்தது. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணை விலை உயர்ந்ததால், பெட்ரொல் டீசல் விலை உயர்த்தப்பட்டதாக எண்ணை நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 14-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணை நிறுவனங்கள் குறைத்து கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது...!
பெட்ரோல், டீசல், விலை உயர்வு பாமர மக்கள் மீது திணிக்கப்படுகிறது. இதனால், அதை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என நாங்கள் கேட்கிறோம். ஆனால், அதனை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர மத்திய அரசுக்கு விருப்பமில்லை என்றார்.