தொடர் அமளியால் மீண்டும் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் மீண்டும் இன்றும் முடங்கியுள்ளது.
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் மீண்டும் இன்றும் முடங்கியுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று தொடங்கி்யது. இந்தக் கூட்டத்தொடரில் பஞ்சாப் வங்கி மோசடி, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோருதல் மற்றும் காவிரி விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இரு அவைகளிலும் எழுப்பினர். இதனால் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடர் அமளியின் காரணமாக நேற்று முடங்கியது.
இன்று மீண்டும் கூடியதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மாநிலங்களவையில் தமிழக எம்பிக்கள் முழக்கமிட்டனர். எம்.பிக்களின் தொடர் முழக்கம் காரணமாக அவையில் அமளி நிலவியது.
இதைத்தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கத்தால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பட்டுள்ளது.