ரூபாயின் மதிப்பில் சரிவு... ஆனால் பங்குச் சந்தையில் ஏற்றம்!
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் 82.92 ஆகத் தொடங்கி 82.89 மற்றும் 82.99 என்ற அளவில் மாற்றம் கண்டது.
அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு, புதன்கிழமை 2 பைசா குறைந்து 82.97 ரூபாய் என்ற அளவில் முடிவடைந்தது. கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் வெளிநாடுகளில் வலுவான அமெரிக்க நாணயம் ஆகியவற்றால் ரூபாயின் மதிப்பு குறைந்தது. இதற்கு முக்கிய காரணம் இந்திய பங்குசந்தையில் கடந்த சில வர்த்தக நாட்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குகளை விற்பனை செய்ததே.
முன்னதாக, கடந்த வியாழன் அன்று, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைப் பதிவு செய்தது. கடந்த வியாழன் அன்று இந்திய ரூபாய் மதிப்பு 9 பைசா சரிந்து இதுவரை காணாத குறைந்தபட்சமான 83.22 ஐத் தொட்டது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், உள்நாட்டு சந்தைகள் வலுவாக உள்ளதாலும், இந்தியாவில் இருந்து வரும் உற்சாகமான மேக்ரோ பொருளாதார தரவு ஆகியவை ரூபாய் மதிப்பு குறைவதால் ஏற்படும் பாதிப்பை குறைக்கின்றன என்று அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர். வங்கிகளுக்கிடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூபாய் 82.92 என்ற அளவில் தொடங்கி திறக்கப்பட்டது மற்றும் 82.89 மற்றும் 82.99 ரூபாய் என்ற வரம்பில் இருந்தது. அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் நாளின் இறுதியில் 82.97 ஆகநிலைபெற்றது.அதன் முந்தைய நாளின் மதிப்பில் இருந்து 2 பைசா குறைவான அளவு ஆகும். செவ்வாயன்று, அமெரிக்க நாணயத்திற்கு எதிராக ரூபாயின் மதிப்பு 82.95 ஆக இருந்தது.
"வலுவான டாலர் மதிப்பு மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றால் இந்திய ரூபாயின் மதிப்பு புதன்கிழமை சரிந்தது. இருப்பினும், வலுவாக உள்ள உள்நாட்டு சந்தைகள் மற்றும் இந்தியாவின் மேக்ரோ பொருளாதார தரவுகள் ஆகியவை ரூபாய் மதிப்பு சரிவு பாதிப்பை குறைத்தன," என்று பிஎன்பி பரிபாஸின் ஷேர்கானின் ஆராய்ச்சி ஆய்வாளர் அனுஜ் சவுத்ரி கூறினார்.
அமெரிக்க பெடரல் இந்த ஆண்டு வட்டி விகிதத்தை இன்னும் ஒரு முறை உயர்த்தலாம் என்ற எதிர்பார்ப்புகளால் டாலர் மதிப்பு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க டாலர் அதிகரிப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றால் ரூபாயின் மதிப்பு சிறிது எதிர்மறையான சார்புடன் வர்த்தகம் செய்யப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். உலக சந்தைகளில் ஏற்படும் தாக்கமும் ரூபாயின் மதிப்பையும் பாதிக்கலாம்.
"இருப்பினும், உள்நாட்டு சந்தைகளில் நிலவும் வலுவான நிலை ரூபாய்க்கு ஆதரவாக இருக்கலாம். அமெரிக்க சிபிஐ தரவுகளுக்கு முன்னதாக வர்த்தகர்கள் எச்சரிக்கையாக இருக்கலாம். USD/INR ஸ்பாட் விலையானது ₹82.70 முதல் ₹83.30 வரை வர்த்தகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது," சவுத்ரி மேலும் கூறினார். அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (FII) செவ்வாயன்று மூலதனச் சந்தையில் நிகர விற்பனையாளர்களாக இருந்தனர், ஏனெனில் அவர்கள் ₹1,047.19 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்று சென்றுள்ளனர்.
உள்நாட்டு பங்குச் சந்தையில், 30-பங்குகள் கொண்ட மும்பை பங்கு சந்தை, பிஎஸ்இ சென்செக்ஸ் (BSE Sensex ) 245.86 புள்ளிகள் அல்லது 0.37 சதவீதம் உயர்ந்து 67,466.99 என்ற அளவில் நிறைவடைந்தது. தேசிய பங்கு சந்தை என்எஸ்இ நிஃப்டி (NSE Nifty) 76.80 புள்ளிகள் அல்லது 0.38 சதவீதம் அதிகரித்து அதன் வாழ்நாள் உச்சமான 20,070.00க்கு சென்றது.
செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, உற்பத்தி, சுரங்கம் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளின் நல்ல முன்னேற்றம் காரணமாக இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி ஜூலையில் ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு 5.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. சில்லறை பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 6.83 சதவீதமாகக் குறைந்துள்ளது, ஜூலையில் 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு 7.44 சதவீதத்தைத் தொட்டது, முக்கியமாக காய்கறிகளின் விலை குறைவதால், ரிசர்வ் வங்கியின் ஆறுதல் மண்டலத்திற்கு மேலேயே உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ