எல்லைக்கட்டுப்பாட்டுப் பகுதியில் 90 உள்கட்டமைப்பு திட்டங்களை துவக்கியது இந்தியா

Infrastructure Development:  குறைந்தபட்ச சுற்றுச்சூழல் சீர்கேடு, அதிகபட்ச தேசிய பாதுகாப்பு, அதிகபட்ச நலன் என்ற மந்திரத்துடன் முன்னேற வேண்டிய நேரம் வந்துவிட்டது: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 13, 2023, 06:22 AM IST
  • குறைந்தபட்ச சுற்றுச்சூழல் சீர்கேடு,
  • அதிகபட்ச தேசிய பாதுகாப்பு
  • 2900 கோடி ரூபாய் மதிப்பில் உள்கட்டமைப்புத் திட்டங்கள்
எல்லைக்கட்டுப்பாட்டுப் பகுதியில் 90 உள்கட்டமைப்பு திட்டங்களை துவக்கியது இந்தியா title=

புதுடெல்லி: குறைந்தபட்ச சுற்றுச்சூழல் சீர்கேடு, அதிகபட்ச தேசிய பாதுகாப்பு, அதிகபட்ச நலன் என்ற மந்திரத்துடன் முன்னேற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். கிழக்கு லடாக்கில் உள்ள நியோமா மேம்பட்ட தரையிறங்கும் மைதானம் (Nyoma Advanced Landing Ground) மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள நெச்சிபு சுரங்கப்பாதையை உள்ளடக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை இந்தியா தொடங்கியுள்ளது.

சீனா, இந்தியாவுடனான எல்லைப் பகுதியில், புதிய இராணுவ உள்கட்டமைப்பைக் கட்டியெழுப்பி வரும் நிலையில், கிழக்கு லடாக்கில் உள்ள எல்ஏசியில் இருந்து 50 கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் போர் விமான நடவடிக்கைகளுக்காக நியோமா மேம்பட்ட தரையிறங்கும் தளத்தை மேம்படுத்துவதற்கான கட்டுமானப் பணிகளை இந்தியா தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளாக எல்லைப் பகுதியில் உள்கட்டமைப்பை மேம்படுத்தி வரும் சீனா, அவ்வப்போது ஆக்ரமிப்பு செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுவதும், அங்கு இந்தியா கடும் கண்காணிப்பை மேற்கொள்வதும் கவனத்தில் கொள்ளத்தக்கது. எனவே, ஆட்கள் மற்றும் பொருட்களை கொண்டு செல்வதற்கு இந்த ஓடுபாதை பயன்படுத்தப்பட்டது. இங்கு, சினூக் ஹெவி-லிஃப்ட் ஹெலிகாப்டர்கள் மற்றும் C-130J சிறப்பு செயல்பாட்டு விமானங்கள் இயக்கப்படுகின்றன என்பதால், இந்தியாவுக்கு இந்தத் திட்டம் முகவும் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | சனாதனத்திற்கு எதிராக பேசினால் நாக்கு பிடுங்கப்படும்... கண்கள் பிடுங்கப்படும் - மத்திய அமைச்சர்!

உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு

சீனா உடனான எல்லைப்பகுதியில், உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (Line of Actual Control (LAC)) அருகில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 12) இந்தியா கிட்டத்தட்ட 90 உள்கட்டமைப்பு திட்டங்களைத் தொடங்கியது. இதில் ஒரு திட்டமான நியோமா அட்வான்ஸ்டு லேண்டிங் கிரவுண்ட் உலகின் மிக உயரமான விமானநிலையமாக மாற உள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

இந்த இரண்டு திட்டங்களோடு, மேற்கு வங்காளத்தில் இரண்டு விமானநிலையங்களை இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். அத்துடன் எல்லைப் பகுதிகளுக்கு அருகில் இரண்டு ஹெலிபேடுகள், 22 சாலைகள் மற்றும் 63 பாலங்கள் ஆகியவையும் அமையவிருக்கின்றன.

எல்லைச் சாலைகள் அமைப்பு

ஜம்முவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், எல்லைச் சாலைகள் அமைப்பின் (Border Roads Organisation (BRO)) உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் அடிக்கல் நாட்டினார். 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்படும் ரூ.2,900 கோடி ($350 மில்லியன்) மதிப்புடைய திட்டங்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலங்கள் வாரியாக திட்டங்களின் எண்ணிக்கை

இந்த திட்டங்களில், அருணாச்சல பிரதேசத்தில் 36, லடாக்கில் 26, ஜம்மு & காஷ்மீரில் 11, மிசோரமில் 5, இமாச்சல பிரதேசத்தில் 3, சிக்கிம், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா இரண்டு மற்றும் நாகாலாந்து, ராஜஸ்தான் மற்றும் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் தலா ஒன்று ஆகும். .

மேலும் படிக்க | Nipah virus: கேரளாவிற்கு வந்துவிட்டதா நிபா வைரஸ்! சந்தேகத்திற்குரிய மரணங்களால் பீதி

எல்லை உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், முன்னோக்கிப் பகுதிகளில் ராணுவத்தின் தடையற்ற இணைப்பை உறுதி செய்யவும், இந்தியாவின் எல்லையில், எல்லை சாலை அமைப்பு BRO சாலைகளை நிர்மாணிக்கிறது.

கிழக்கு லடாக்கில் நியோமா விமானநிலையத்திற்கான அடிக்கல்லையும் பாதுகாப்பு அமைச்சர் நாட்டினார். ஏறத்தாழ ரூ.200 கோடி  செலவில் அமைக்கப்படும் இந்த விமானநிலையம், லடாக்கின் விமான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதோடு, வடக்கு எல்லையில் இந்திய விமானப்படையின் திறனையும் அதிகரிக்கும்.

வளர்ச்சி நடவடிக்கைகள் கவனம் செலுத்த வேண்டும் 
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சிங், வளர்ச்சி நடவடிக்கைகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

"இதுவரை, 'குறைந்தபட்ச முதலீடு, அதிகபட்ச மதிப்பு' என்ற மந்திரத்துடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம். இப்போது, ‘குறைந்தபட்ச சுற்றுச்சூழல் சீர்கேடு, அதிகபட்ச தேசிய பாதுகாப்பு, அதிகபட்ச நலன்’ என்ற மந்திரத்துடன் நாம் முன்னேற வேண்டும்,” என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் படிக்க | ’மோடியின் மெகா ஊழல்’ பட்டியல் போட்ட ஆர்.எஸ்.பாரதி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News