சக மாணவிகளை வீடியோ எடுத்து இணையத்தில் கசியவிட்ட மாணவி கைது
chandigar university : சண்டிகர் பல்கலைக்கழகத்தில் சக மாணவிகளை ஆபாசமான வீடியோ எடுத்து இணையத்தில் கசிய விட்டதற்காக மாணவி கைது செய்யப்பட்டார்.
சண்டிகர் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி ஒருவர், கல்லூரி விடுதியில் தனது சக மாணவிகளை ஆபாசமாக வீடியோ எடுத்து, அதை இமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் உள்ள ஒரு நபருக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. அந்நபர் அந்த வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.
இச்சம்பவத்தைக் கண்டித்து, நேற்று இரவு ஏராளமான மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், சம்மந்தப்பட்ட மாணவியைக் கைது செய்துள்ளனர்.
மேலும் படிக்க | லட்சாதிபதி ஆசையில் 27 லட்சம் பறிகொடுத்த ஜெய்ப்பூர் இளைஞர்
இந்த சம்பவத்திற்கு பதிலளித்த பஞ்சாப் பள்ளிக் கல்வி அமைச்சர் ஹெச்எஸ் பெயின்ஸ், சண்டிகர் பல்கலைக்கழக மாணவர்களை அமைதியாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். மேலும் குற்றவாளிகள் தப்பமாட்டார்கள் என்றும் உறுதியளித்தார்.
வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வெளியாகின. இருப்பினும், இதனை மறுத்துள்ள பல்கலைக்கழக நிர்வாகம், தற்கொலை முயற்சி எதுவும் நடைபெறவில்லை, ஒரு பெண் மட்டும் மயங்கி விழுந்ததாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், பல்கலைக்கழக நிர்வாகம் கூறியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
மேலும் படிக்க |