ஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்கக் கோரிய பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் சட்டத்தின்படி ஆண்களின் திருமண வயது 21 என்றும், பெண்களின் திருமண வயது 18 என்றும் உள்ளது. இந்த வயதிற்கு முன்னர் திருமணம் செய்தால் சட்டப்படி குற்றம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. 


இந்நிலையில், ஆண்கள் ராணுவத்தில் சேரவும், தேர்தலில் வாக்களிக்கவும் வயது 18 என்ற நிலை இருக்கும் போது, ஆண்களின் திருமண வயதை மட்டும் 21 ஆக உயர்த்தியுள்ளது ஏன்?. ஆண்களின் திருமண வயதை 21 இல் இருந்து 18ஆகக் குறைக்கக் கோரி அசோக் பாண்டே என்கிற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். 


இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த மனு விசாரிப்பதற்குத் தகுதியற்றது எனக் கூறி நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்தனர். அத்துடன் மனுதாரரான அசோக் பாண்டேக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது...!