கேரள மாநிலம் ஆலபுழாவில் இருந்து சபரிமலை கோயிலுக்கு தரிசனத்திற்கு சென்ற பெண், பத்தனம்திட்டாவில் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தம்...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக ஐயப்ப பக்தர்கள், இந்து அமைப்புகள் கேரளாவில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 


இதை தொடர்ந்து இன்று கோவில் நடை திறப்பதையொட்டி, கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களை தடுக்க வேண்டும் என ஐயப்ப பக்தர்கள் திட்டமிட்டுள்ளனர். அதுபடியே இன்று நிலக்கல் பகுதியில் வரும் பெண்களை ஐயப்ப பெண் பக்தர்கள் நிறுத்துவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்து அமைப்பினர் சபரிமலைக்கு செல்லும் ஒவ்வொரு வாகனத்தையும் சோதனை செய்து, பெண்கள் யாராவது இருந்தால் கீழே இறங்குபடி வற்புறுத்தி வருகின்றனர். இதையடுத்து அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலபடுத்தபட்டுள்ளது. 



இந்நிலையில், கேரள மாநிலம் ஆலபுழாவில் இருந்து சபரிமலை கோயிலுக்கு தரிசனத்திற்கு சென்ற 45 வயது பெண், பத்தனம்திட்டாவில் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். மேலும், அவர் பாதுகாப்புக்காக அப்பெண் பத்தனம்திட்டா காவல் நிலையம் அழைத்துச்செல்லப்பட்டார். செய்தி சேகரிக்க வந்த இளம் வயது பெண் பத்திரிகையாளர்கள் இருவரும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். 



இதையடுத்து, சபரிமலை கோயிலுக்கு செல்லும் பெண்களை தடுத்து நிறுத்த முயன்ற 15 பெண் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.