புதுடெல்லி: நாளை நீங்கள் என்ன செய்கிறீர்கள். அதாவது டிசம்பர் 7 அன்று? நீங்கள் கொஞ்சம் அதிகமாகவே ஜிஎஸ்டி வரியை செலுத்துபவரா? அல்லது ஜிஎஸ்டி குறித்து ஏதாவது சிரமம் இருக்கிறதா? அப்படி என்றால், டிசம்பர் 7 ஆம் தேதி அனைத்து வேலைகளையும் விட்டுவிட்டு ஜிஎஸ்டி அலுவலகத்தை அடையுங்கள். உங்கள் கருத்தை கேட்க ஜிஎஸ்டி துறை விரும்புகிறது. ஜிஎஸ்டி வருமானத்தை தாக்கல் செய்வதில் உங்களுக்கு சிரமம் இருந்தால், நிச்சயமாக டிசம்பர் 7, 2019 அன்று மத்திய நேரடி வரி மற்றும் சுங்க வாரியத்தின் (CBIC) கீழ் உள்ள வரி அலுவலகத்திற்கு செல்லுங்கள். அதிகாரிகள் உங்களை சந்திக்க அலுவலகத்தில் காத்திருப்பார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் சிபிஐசி (Central Board of Indirect Taxes and Customs) அனைத்து ஜிஎஸ்டி அலுவலகங்களிலும் குறை தீர் தினத்தை கொண்டாடுகிறது. நீங்கள் அந்த அலுவலகங்களை அடைய வேண்டும். உங்கள் பிரச்சினைகளை சொல்ல வேண்டும். உங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டும். வருமானத்தை தாக்கல் செய்வதில் ஏதேனும் சிக்கல் இருந்தால், பிரச்சினை உடனடியாக தீர்க்கப்படும். ஏப்ரல் 1, 2020 முதல் ஜிஎஸ்டிக்கு புதிய வருவாய் படிவங்கள் வருகின்றன. அதை நிரப்ப சிபிஐசி தொடர்ந்து தொழில் அதிபர்களையும் மற்றும் ஜிஎஸ்டி வரி செலுத்துவோரை சந்தித்து வருகிறது.


அதே நேரத்தில், சிபிஐசி மின்-விலைப்பட்டியல் முறையின் கீழ் புதிய பில்களை உருவாக்க வலியுறுத்துகிறது. பில்களை உருவாக்கும் பழைய முறைகள் இனிமே இயங்காது. ஆனால் அவை நாடு முழுவதும் ஒரே மாதிரியான வடிவமைப்பைக் கொண்டிருக்கும். ஜி.எஸ்.டி பற்றி, வருமானத்தை தாக்கல் செய்வது பற்றி மக்களின் அனுபவத்தை அமைச்சகம் கேட்க விரும்புகிறது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் வரி செலுத்துவோரிடம் தெரிவித்திருந்தார். எனவே தான் வரித்துறையில் நாளை கருத்து தினத்தை கொண்டாடுகிறார்.