முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஐ.என்.எக்.ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு 12 நாள் சி.பி.ஐ காவலுக்கு பின்னர் நேற்று டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். வரும் 24-ம் தேதி வரை அவரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதை தொடந்து நிருபர்களிடம் பேசிய பொது கிண்டலாக எனக்கு பசி எடுக்கவில்லை. அதனால் குறைவாக தான் சாப்பிடுகிறேன். இதனால் எனது உடல் எடை குறைந்துள்ளது. எனக்கு புதிய ஆடைகள் தேவைப்படுகிறது. பழைய ஆடைகள் எல்லாம் லூஸாகிவிட்டது. 


அதனால் யாரேனும் எடை குறைக்க வேண்டும் நினைத்தால் அவர்கள் சி.பி.ஐ-யை அழையுங்கள் என்று சிறப்பு நீதிமன்றத்திற்கு அழைப்பிற்கு காத்திருந்த வேளையில் நிருபர்களிடம் கூறியுள்ளார். 


அவர் நான் வழக்கமாக அதிகாரிகளிடம் மணி எத்தனை? என்று கேட்டுக் கொண்டே இருந்தேன்'' என்று கார்த்தி சிதம்பரம் தனது வக்கீல்களிடம் தெரிவித்துள்ளார். மேலும், சி.பி.ஐ அதிகாரிகள் மீது அவர் எவ்வித புகாரையும் அளிக்கவில்லை. என்னை கண்ணியத்துடன் நடத்தினர் என்றும் தெரிவித்துள்ளார். 


மேலும் தன்னை சிறையில் கழிப்பிடத்துடன் கூடிய தனி அறையில் அடைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி சுனில் ரானா, சிறையில் பாதுகாப்பை உறுதிப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.