புதிய இந்தியாவில் RSS என்ற ஒரே ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு மட்டுமே இடமுள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 1817ஆம் ஆண்டு பேஷ்வா ராணுவத்துக்கு எதிரான போரில் இறந்து போன மஹர் இன மக்களை நினைவுகூரும் வகையில், 2-வது நூற்றாண்டு விழா கடந்த வருடம் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் மகாராஷ்டிர மாநிலம், பீமா-கோரேகான் கிராமத்தில் கடந்த ஆண்டு தலித்துகளுக்கும், பேஷ்வா சமூகத்தினரும் இடையே நிகழ்ந்த கலவரம் தொடர்பாக இடதுசாரி சிந்தனையாளர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் என 5 பேரை மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 


இந்நிலையில், இந்த நிகழ்வு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ``புதிய இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் என்ற ஒரே ஒரு தொண்டு நிறுவனத்துக்கு மட்டுமே இடமுள்ளது. மற்ற அனைத்து தொண்டு நிறுவனங்களையும் இழுத்து மூடிவிடுங்கள். அனைத்து சமூக செயற்பாட்டாளர்களையும் சிறையில் தள்ளிவிடுங்கள். எதிர்ப்பு தெரிவித்தால் சுட்டுவிடுங்கள். புதிய இந்தியா உங்களை வரவேற்கிறது'' என்று பதிவிட்டுள்ளார்.