இந்தியாவின் ‘இந்த’ மாநிலங்களில் 100% மக்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி வழங்கி சாதனை
கொரோனாவை ஒழிக்கும் பேராயுமாக தடுப்பூசி ஒன்றே இருக்கும் நிலையில், இந்தியா முழுவதிலும், தடுப்பூசி போடும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கொரோனாவை ஒழிக்கும் பேராயுமாக தடுப்பூசி ஒன்றே இருக்கும் நிலையில், இந்தியா முழுவதிலும், தடுப்பூசி போடும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும், தடுப்பூசி போடுவதில், ஒரு புதிய சாதனை படைக்கப்பட்டு வருகிறது. இந்தியா தனது மக்கள்தொகையில் 40 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அதிலு, இந்தியாவின் ஆறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயது மக்களில் 100 சதவிகிதம் மக்களுக்கு குறைந்த பட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி (Corona Vaccine) போட்டுள்ளன. மத்திய அரசு வழங்கிய தரவுகளின்படி, தாதர் & நகர் ஹவேலி மற்றும் டாமன் & டியூ, கோவா, இமாச்சலப் பிரதேசம், லடாக், லட்சத்தீவு மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தடுப்பூசி பெற தகுதியான மக்கள் அனைவருக்கும் குறைந்த பட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது .
ALSO READ | தமிழகத்தில் 4 கோடி தடுப்பூசிகள் செலுத்தி இமாலய சாதனை!
மாநில மக்கள் அனைவருக்கு குறைந்த படசம் ஒரு ஒரு தடுப்பூசி மருந்தை வழங்கிய மாநிலங்களின் பெயரையும் அவர்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி மருந்துகளின் எண்ணிக்கையையும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
தாத்ரா நகர் ஹவேலி, டாமன், டையூ- 6.26 லட்சம் டோஸ் தடுப்பூசிகள்
கோவா- 11.83 லட்சம் தடுப்பூசிகள்
இமாச்சல பிரதேசம்- 55.74 லட்சம் தடுப்பூசிகள்
லடாக்- 1.97 லட்சம் தடுப்பூசிகள்
லட்சுவதீப்- 53,499 தடுப்பூசிகள்
சிக்கிம்- 5.10 லட்சம் தடுப்பூசிகள்
இந்த மாநிலங்கள் அனைவருக்கு தடுப்பூசி என்ற இந்த மைல்கல்லை அடைந்தவுடன், மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா ட்விட்டரில் அவர்களை வாழ்த்தி, மாநில அரசுகளையும், சுகாதார ஊழியர்களையும் பாராட்டினார்.
மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது டிவிட்டர் பதிவில், “இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு முதல் டோஸ் கோவிட் 19 தடுப்பூசி மருந்தை 100% வயது வந்தோருக்கு வழங்கியதற்கு வாழ்த்துக்கள். இந்த பகுதிகளில் உள்ள சுகாதார ஊழியர்களின் விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்புக்கு பாராட்டுக்கள். ”
இந்தியா இதுவரை நாடு முழுவதும் 73 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் மேலும் மக்கள்தொகையில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். இந்திய மக்கள்தொகையில் 12 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போட்டிருக்கிறார்கள்.
ALSO READ | நிபா வைரஸால் இறந்த சிறுவன்! ரம்புட்டான் பழம் சாப்பிட்டது தான் காரணமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR