பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18ந்தேதி தொடங்குகிறது. இந்நிலையில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. அதில் ஆங்கில வார்த்தைகளும், இந்தி வார்த்தைகளும் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுகேட்பு ஊழல், கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளாக சேர்க்கப்பட்டுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | YSR Congress கட்சியில் இருந்து மகளின் கட்சிக்கு தாவிய ஜெகன் மோகன் அம்மா விஜயலட்சுமி


 


இரட்டை வேடம், பயனற்றது, நாடகம், ரத்தக்களரி, குரூரமானவர், ஏமாற்றினார், குழந்தைத்தனம், கோழை, கிரிமினல், முதலை கண்ணீர், அவமானம், கழுதை, கண்துடைப்பு, ரவுடித்தனம், போலித்தனம், தவறாக வழிநடத்துதல், பொய், உண்மையல்ல ஆகிய வார்த்தைகளும் இனிமேல் தடை செய்யப்படுகின்றன. முட்டாள்தனம், பாலியல் தொல்லை, குண்டர்கள், லாலிபாப், பாப்கட் ஆகிய வார்த்தைகளும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இவற்றை பயன்படுத்தினால் சபை தலைவர்கள், சபை குறிப்பில் இருந்து நீக்கிவிடுவார்கள்.



பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இந்த மாதம் 18-ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பல்வேறு மசோதாக்களை இந்தக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதே சமயத்தில், மகாராஷ்டிரா அரசியல், அக்னிபத் மற்றும் பல்வேறு பிரச்சினைகளை பேச எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்த காரணங்களால் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பல பிரச்சனைகள் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தமாக 17 நாட்கள் நடக்கும் இந்தக் கூட்டத்தின்போது ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தலும் நடைபெற உள்ளது. 


மேலும் படிக்க | GST Update: வரி அதிகரிப்பால் விலை உயரப்போகும் ‘சில’ பொருட்கள்


 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR