மூன்றாவதாக பிறக்கும் குழந்தைக்கு வாக்குரிமை உட்பட மற்ற அரசின் சேவைகளை வழங்கக்கூடாது என்று யோகா குரு பாபா ராம் தேவ் தெரிவித்துள்ளார்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

யோகா குருவான பாபா ராம்தேவ் நடத்தி வரும் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் நிர்வாக மேலாளர் ஆசார்ய பாலகிருஷ்ணாவுக்கு சிறந்த சுகாதாரப் பொருட்கள் தயாரிக்கும் 10 தொழிலதிபர்களில் ஒருவர் என்னும் விருது அளிக்கபட்டுள்ளது. இதை ஒட்டி நடந்த கூட்டத்தில் பாபா ராம்தேவ் ஆசார்ய பாலகிருஷ்ணாவை தனது நிறுவனத்துக்கு பெருமை தேடித் தந்தவர் என புகழ்ந்தார்.


இந்தியாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த யோகா குரு பாபா ராம் தேவ் புதிய யோசனையை கூறியுள்ளார். ஹரித்வாரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் “ இந்திய மக்கள்தொகை 150 கோடிக்கு மேல் அதிகமாக கூடாது என்று கூறினார். மேலும் பேசிய அவர் மக்கள்தொகையை கட்டுப்படுத்த சட்டரீதியிலான நடவடிக்கை தான் ஒரே வழி என்று தெரிவித்தார். ஒரு பெற்றோருக்கு மூன்றாவதாக பிறக்கும் குழந்தைக்கு ஓட்டுரிமையை வழங்கக்கூடாது எனவும் கூறினார். மூன்றாவதாகவோ அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தேர்தலில் போட்டியிடுவது உட்பட அரசின் மற்ற சேவைகளையும் வழங்கக்கூடாது என்றும் அவர் ஆலோசனை வழங்கினார்.