ஒரு வாரத்திற்குள் மூன்றாவது முறையாக ரயில் விபத்து, அந்தேரி-சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ஹார்பர் ரயில் நிலையத்தின் ஹர்போர் ரயில் காலை 9.55 மணியளவில் மஹீம்-தெற்கு பக்கத்தில் தடம் புரண்டது. 
 
டெல்லி-கைஃபாட் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்துக்கு இரண்டு நாள் அடுத்து இந்த சமபாவம் நிகழ்ந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக ஆகஸ்ட் 19 அன்று நடந்த டெல்லி-கைஃபாட் எக்ஸ்பிரஸ் விபத்தில் 14 பெட்டிகள் தடம் புரண்டதில் 24 பேர் உயிர் இழந்தனர், 156 பேர் காயமடைந்தனர். இந்த இரண்டு சம்பவங்களும் உத்திர பிரதேசத்தில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


தற்போது இந்த ஹர்போர் ரயில் விபத்து காரணமாக வாதாலா-ஆந்தேரிக்கு இடையே ரயில் டிராஃபிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.


உத்திரப்பிரதேசத்தில் ஏற்கனவே நடந்த இந்த இரண்டு ரயில் விபத்துகளைத் தொடர்ந்து, 'வேதனையடைந்த' சுரேஷ் பிரபு ரயில்வே அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். எனினும், பிரதம மந்திரி நரேந்திர மோடி, "அவரை காத்திருக்குமாறு கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.