புதுடெல்லி: கேரளாவுக்குப் பிறகு, மற்றொரு தென் மாநிலமான கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்றது. குறிப்பிடத்தக்க வகையில், கர்நாடகாவில் புதிதாக 2,052 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர், 35 பேர் இறந்தனர். இதனுடன் அங்கு மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,01,247 ஆகவும், இறந்தவர்களின் எண்ணிக்கை 36,491 ஆகவும் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தலைநகரமான பெங்களூருவில் வியாழனன்று 506 பேர் தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டனர். இது புதனன்று பதிவு செய்யப்பட்ட 376-ஐ விட 34 சதவிகிதம் அதிகமாகும்.


பெங்களூருவைத் தவிர தட்சிண கன்னடாவில் 396 பேர், உடுப்பியில் 174 பேர், மைசூருவில் 157, ஹாசனில்ன் 136 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் பெங்களூரு முதல் இடத்தில் உள்ளது. இங்கு மொத்தமாக 12,26,463 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து மைசூருவில் 1,72,637, துமகுருவில் 1,17,667 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


மாநிலத்தில் மொத்தமாக 23,253 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாநிலத்தின் நேர்மறை விகிதம் 1.37 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.70 சதவீதமாகவும் இருந்தது.


ALSO READ:TN Lockdown: ஊரடங்கு தளர்வு குறித்து முதலவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை


ஒரு வருடத்திற்கு முன்னர் மார்ச் மாதத்தில் தொற்றுநோய் பரவத் தொடங்கியதிலிருந்து கர்நாடகாவில் மொத்தம் 36,491 பேரும் பெங்களூருவில் 15,852 பேரும் இறந்துள்ளனர். நேற்று மட்டும் கர்நாடகாவில் மொத்தம் 35 பேரும் பெங்களூருவில் மட்டும்  9 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


COVID-19 -காக போடப்பட்ட கட்டுப்பாடுகளை (COVID Restrictions) அரசு நீக்கிய பிறகு கர்நாடகாவில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. ஜூலை 19 முதல், திரைப்பட அரங்குகள் 50 சதவீத திறனுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டன. உயர் கல்வி நிறுவனங்கள் ஜூலை 26 முதல் திறக்க அனுமதிக்கப்பட்டன. இரவு ஊரடங்கு உத்தரவும் தளர்த்தப்பட்டது.


ஏப்ரல் மாதத்தில் எற்பட்ட கோவிட் இரண்டாவது அலைக்குப் பிறகு, ஏப்ரல் 27 முதல் மாநில அரசு ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளைச் செயல்படுத்தியது. இருப்பினும், தொற்றுநோயின் இரண்டாவது அலை ஜூன் நடுப்பகுதியில் சற்று குறைந்த பின்னர் மாநில அரசாங்கம் தடைகளை நீக்கியதால் மீண்டும் தொற்று அதிகரித்துள்ளது.


இதற்கிடையில், கோவிட் (COVID-19) தொற்றுநோய் கேரளாவில் பரவலாக உள்ளது. வியாழக்கிழமை மூன்றாவது நாளாக 20,000 க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். மத்திய அரசின் சுகாதார நிபுணர்களின் சிறப்பு குழு வெள்ளிக்கிழமை மாநில தலைநகருக்கு வருவதற்கு ஒரு நாள் முன்னதாக இந்த ஒற்றை நாள்  எண்ணிக்கை வந்துள்ளது. மாநிலத்தில் 1,54,820 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது நாட்டின் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு அதிகமாகும்


ALSO READ: TN COVID Update July 29: இன்று புதிதாக 1859 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR