உலகிலேயே தட்டையான நாடு என்ற புகழுக்குரிய மிக அழகிய பல சிறிய தீவுகளால் ஆன நாடு தான் மாலத் தீவு. மீன்பிடிப்பதை முக்கியத் தொழிலாகக் கொண்ட இந்த நாட்டின் தலைநகரம் மாலே. இந்தியாவின் லட்சத்தீவுகளுக்கு தெற்கேயும், இலங்கையிலிருந்து சுமார் 700 கிலோ மீட்டர் தென்மேற்காகவும் அமைந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அழகான மணல் வெளிகள், தென்னைமரங்கள், அமைதி பூங்காவை திகழும் சூழல் இப்படி வர்ணனை செய்து கொண்டே போகலாம், அப்படி ஒரு அழகான இடமாக இது திகழ்கிறது. இங்கு சுற்றுலா பயணிகள் தங்க சொகுசு பங்களாக்கள், கடற்கரை விடுதிகள் நிறைய உள்ளன. சுற்றுலா பயணிகளை கவருவதற்காகவே நீர் விளையாட்டுகள், படகு சவாரிகள் என இடமே அமர்க்களப்படுகிறது. இது நான்கு புறமும் நீர்பரப்பால் சூழப்பட்ட ஒரு தீவுப் பகுதியாகும்.


அழகான சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:-