சோபூரில் குண்டு வெடிப்பு: மூன்று குழந்தைகள் காயம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாராமுல்லாவில் நடந்த குண்டு வெடிப்பில் மூன்று குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாராமுல்லாவில் உள்ள சோபூரில் ராணுவ முகாம் அமைந்துள்ள இடத்தில் இன்று திடீரென குண்டு வெடிப்பு நடந்தது.
இதனால், குண்டு வெடிப்பில் மூன்று குழந்தைகள் காயடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்.
இந்த குண்டு வெடிப்பு நடந்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக சோபூர் காவல்துறை கண்காணிப்பாளர் ஹர்மீத் சிங் தெரிவித்துள்ளார்.