J&K: பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தின் டோர்ரு ஷஹாபாத் பகுதியில், தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டை நெடுநேரம் வரை நீடித்தது. இந்த துப்பாக்கிச்சண்டைகளில், ஒரு ராணுவ வீரர், பொதுமக்களில் ஒருவரும் பலியாகியுள்ளனர். பயங்கரவாதி ஒருவனும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான்.
ஸ்ரீநகரில் இருந்து 58 கி.மீட்டர் தொலைவில் உள்ள அனந்தநாக் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்பு படையினரை நோக்கி அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதை பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதி முழுவது பதற்றம் நிலவுகிறது.