ஒரே வீட்டில் 3 சிறுமிகள்; டெல்லியில் தொடரும் மர்ம மரணங்கள்!
டெல்லி மந்தவெளி பகுதியில் 3 சகோதரிகள் மர்மமான முறையில் இறந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
டெல்லி மந்தவெளி பகுதியில் 3 சகோதரிகள் மர்மமான முறையில் இறந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
டெல்லி மந்தவெளி பகுதியை சேர்ந்தர் சரன் சாகர். இவர் கடந்த திங்கள் அன்று காலை பணிநிமித்தமாக வெளியே சென்றிருந்தார். பின்னர் பிற்பகள் வீட்டிற்கு திரும்புகையில் அவரது மூன்று மகள்கள் வீட்டில் பினமாக கிடந்துள்ளனர். இவர்களது வயது முறையே 2, 4 மற்றும் 8 என தெரிகிறது.
அசைவுகள் இன்றி வீட்டில் கிடந்த இவர்களை அருகில் இருந்த சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அப்பகுதி மக்கள் எடுத்துச் சென்றுள்ளனர். சிறுமிகளை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமிகள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
பின்னர் இறந்த உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த சிறுமிகளின் உடலில் எவ்வித காயங்கள் இல்லை எனவும், உள்காயங்கள் மட்டும் தென்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பார்பதற்கு இறக்கையான மரணம் போல் தோன்றினாலும், மூன்று குழந்தைகள் ஒரே இடத்தில் ஒரே சமையத்தில் இறந்திருப்பது சந்தேகத்தினை எழுப்பியுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு பின்னரே முழுவிவரங்களை அளிக்க முடியும் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது!