இன்று(புதன்கிழமை) மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக துஷார் மேத்தா நியமிக்கப்பட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் பதவி விலகியதை அடுத்து, அன்று முதல் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக பதவி நிரப்பப்படாமல் இருந்து வந்தது.


இந்நிலையில் கிட்டத்தட்ட பத்து மாதங்களாக காலியாக இருந்த பதவிக்கு துஷார் மேத்தா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 2020 ஆம் ஆண்டு ஜூன் 30 வரை அல்லது அடுத்த நியமனம் செய்யும் வரை பதவியில் இருப்பார். மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் (இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரல்) பதவி என்பது இந்திய அரசாங்கத்தின் இரண்டாவது மிக உயர்ந்த பதவியாகும்.


 



தற்போது மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராகவும் துஷார் மேத்தா இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது