சிறையில் இருக்கும் கெஜ்ரிவாலை அவரது மனைவி ஏன் சந்திக்க முடியவில்லை?
Arvind Kejriwal Vs Sunita Kejriwal: டெல்லி முதல்வர் அர்விஞ்ச் கெஜ்ரிவாலை அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவாலை சந்திக்க அனுமதிக்கவில்லை என்று திகார் சிறை நிர்வாகம் மீது ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
Arvind Kejriwal, Delhi: டெல்லியில் அரசியல் குழப்பம் இன்னும் நீடித்து வருகிறது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவாலை சந்திக்க அனுமதிக்கவில்லை என்று திகார் சிறை நிர்வாகம் மீது ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சுனிதா கெஜ்ரிவால் இன்று (ஏப்ரல் 29, திங்கள்கிழமை) சந்திக்க இருந்தார். ஆனால் இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த சந்திப்பை திகார் சிறை நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
இதற்கிடையில், இன்று டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி மர்லினா மதியம் 12:30 மணிக்கு திகார் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்கிறார். அதேபோல நாளை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் திகார் சிறைக்கு சென்று கெஜ்ரிவாலை சந்திக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் முதல்வர், அமைச்சர் அதிஷி ஆகியோருக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அனுமதி கிடைத்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலுக்கு ஏன் அனுமதி வழங்கப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுக்குறித்து திகார் சிறை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
திகார் சிறை நிர்வாகம் விளக்கம்
சிறை விதிகளின்படி, சிறையில் இருக்கும் கைதியை ஒரு வாரத்தில் இருவர் சந்திக்கலாம். திகார் நிர்வாகத்தின் கூற்றுப்படி, அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா அவரை திகாரில் இதுவரை 4-5 முறை சந்தித்துள்ளார். யாராக இருந்தாலும் அனைவருக்கும் சிறை விதி பொருந்தும் எனக் கூறியுள்ளது.
மேலும் சிறை விதிகளின்படி, அரவிந்த் கெஜ்ரிவாலை வாரத்தில் இரண்டு முறை மட்டுமே சிறையில் சந்திக்க முடியும். இதுபோன்ற சூழ்நிலையில், ஏற்கனவே திட்டமிட்டபடி, முதல்வர் கெஜ்ரிவால் திங்கள்கிழமை (ஏப்ரல் 29) அமைச்சர் அதிஷியையும், செவ்வாய்கிழமை (ஏப்ரல் 30) பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானையும் சந்திக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக இந்த வாரம் சுனிதா கெஜ்ரிவால் தனது கணவரை (அரவிந்த் கெஜ்ரிவால்) சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. அதேநேரத்தில் அடுத்த வாரம் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சுனிதா கெஜ்ரிவால் சந்திக்கலாம் என சிறை நிர்வாகம் கூறியதாக ஆதாரங்கள் கூறுகின்றன.
திகார் சிறை நிர்வாகம் மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சுனிதா கெஜ்ரிவால் சந்திப்பை திகார் சிறை நிர்வாகம் எந்த தகவலையும் தெரிவிக்காமல் ரத்து செய்துள்ளதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. இந்த சந்திப்பு வேண்டுமென்றே திட்டமிட்டு ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அக்கட்சி குற்றம் சாட்டுகிறது.
கெஜ்ரிவாலை சந்திக்க அதிஷிக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. சிறை விதிகளின்படி, ஒரு வாரத்தில் இரண்டு முறை சந்திக்கலாம். நாங்கள் அதிஷியுடன் சுனிதாவின் பெயரையும் திகார் நிர்வாகத்திற்கு அஞ்சல் மூலம் அனுப்பியிருந்தோம், ஆனால் சிறை நிர்வாகம் சுனிதாவின் சந்திப்பை நிறுத்தியது என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், திகார் சிறை நிர்வாகத்தால் துன்புறுத்தப்படுவதாக ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. ஒரே நேரத்தில் இரண்டு பேரை கெஜ்ரிவால் சந்திக்கலாம் என்றும், ஆனால் சுனிதா கெஜ்ரிவாலை முதல்வர் கெஜ்ரிவாலை சந்திக்க சிறை நிர்வாகம் வேண்டுமென்றே அனுமதிக்கவில்லை என்றும் ஆம் ஆத்மி கூறியுள்ளது.
இன்று உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனு மீதான விசாரணை
தன்னை கைது செய்ததை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
முன்னதாக, அரவிந்த் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், அமலாக்கத்துறை முன்வைத்த ஆதாரங்களின் அடிப்படையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது சட்டவிரோதமானது அல்ல. எனவே கெஜ்ரிவாலின் கைது செல்லுபடியாகும். அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்படுகிறது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க - அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பின்னடைவு.. “கைது செய்தது சரி தான்” டெல்லி உயர் நீதிமன்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ