அரவிந்த் கெஜ்ரிவால் நியூஸ்: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜாமீன் பெறுவதற்காக, மாம்பழம், இனிப்புகள், சர்க்கரை கலந்த தேநீர் போன்ற இனிப்பு வகைகளை வேண்டுமென்றே உட்கொள்வதாக அமலாக்க இயக்குனரகம் (ED) கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. டெல்லி நீதிமன்றத்தில் இன்று கெஜ்ரிவால் மனு மீதான விசாரணையின் போது அமலாக்கத் துறை சார்பாக ஆஜாரான வக்கீல் ஜோஹெப் ஹொசைன் குற்றம்சாட்டி உள்ளார்.
அமலாக்கத் துறை தரப்பு வாதம்
டெல்லி நீதிமன்றத்தில் இன்று நடந்த தனது சுகர் லெவலை தொடர்ந்து சோதிக்கவும் மற்றும் குடும்ப மருத்துவரிடம் பேசவும் அனுமதிக்க வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான் விசாரணை நடைபெற்றது. அப்பொழுது அமலாக்கத் துறை தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் ஜோஹெப் ஹொசைன், "இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே கெஜ்ரிவால் உணவை சாப்பிட்டு வருகிறார். தினமும் மாம்பழம், இனிப்புகள் பொருட்கள் மற்றும் சர்க்கரை கலந்த தேநீர் போன்றவற்றை உட்கொள்கிறார். இதன்மூலம் தனது உடலில் சர்க்கரை அளவு அதிகரித்து விட்டதாகக் கூறி மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் வேண்டுமென்றே அரவிந்த் கெஜ்ரிவால் இவ்வாறு செய்கிறார்" என கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வாதிட்டார்.
அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வாதம்
அமலாக்கத் துறை வழக்கறிஞரின் வாதத்துக்கு கடுமையான எதிர்வினை ஆற்றிய அரவிந்த் கெஜ்ரிவாலின் வழக்கறிஞர் விவேக் ஜெயின் கூறுகையில், "அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுக்கள் ஊடகங்களுக்கு தீனி போட வேண்டும் என்ற நோக்கத்தில் முன்வைக்கப்பட்டு உள்ளது என்றார். அதைத் தொடர்ந்து வேறொரு மேம்பட்ட மனுவைத் தாக்கல் செய்யப்போவதாகாக் கூறி, சர்க்கரை அளவு தொடர்ந்து சோதிக்கவும் மற்றும் குடும்ப மருத்துவரிடம் பேசவும் அனுமதிக்க வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவைத் திரும்பப் பெற்றார். மேலும் கெஜ்ரிவாலின் இரத்த சர்க்கரை அளவுகளின் ஏற்ற இறக்கமான தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டினார் வழக்கறிஞர் விவேக் ஜெயின்.
மேலும் படிக்க - அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பின்னடைவு.. “கைது செய்தது சரி தான்” டெல்லி உயர் நீதிமன்றம்
திகார் சிறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு
இருதரப்பு வாதங்களை கெட்ட நீதிபதிகள், "அரவிந்த் கெஜ்ரிவாலின் உணவு முறை குறித்த விவரங்களை அளிக்குமாறு திகார் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் தொடர்புடைய பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக தற்போது திகார் சிறையில் நீதிமன்ற காவலில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் சட்டப் போராட்டம் நீடித்து வருகிறது.
டெல்லி மதுபானக் கலால் கொள்கை வழக்கில் நீண்ட விசாரணைக்குப் பிறகு முதல்வர் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை மார்ச் 21 அன்று கைது செய்தது. பின்னர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜார்படத்தப்பட்டார். அவரை ஏப்ரல் 1 ஆம் தேதி வரை தனித்தனியாக இரண்டு முறை அமலாக்கத் துறை காவலில் வைக்க உத்தரவிட்டது. இதையடுத்து, ஏப்ரல் 1 ஆம் தேதி அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தப்பட்டார். அப்பொழுது அவரை ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல்
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை கைது மற்றும் அமலாக்கத்துறை காவலுக்கு அனுப்பியதற்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை ஏப்ரல் 9 அன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்தது. அதில், "அமலாக்கத்துறை முன்வைத்த ஆதாரங்களின் அடிப்படையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது சட்டவிரோதமானது அல்ல. மேலும் டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய பங்கு வகித்துள்ளார். எனவே கெஜ்ரிவாலின் கைது செல்லுபடியாகும் எனக் கூறி அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது. அதை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ