திருமலையில் சிறுவன் ஒருவனை சிறுத்தை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. வியாழன் அன்று அலிபிரி - திருமலை நடைபாதையில் இருந்து திருமலைக்கு நடந்து சென்று கொண்டிருந்த 5 வயது குழந்தை கௌஷிக் சிறுத்தை தாக்கியதில் பலத்த காயம் அடைந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆந்திராவின் அதோனியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக திருப்பதிக்கு சென்றனர். அவர்கள் திருப்பதியில் (அலிபிரி) திருமலா கோயிலுக்கு நடைபயணம் மேற்கொண்டனர். இடையில் 7வது மைலில் அனுமன் சிலை அருகே, சிறுவனின் தாத்தா தின்பண்டங்கள் வாங்க நின்றார். அதன் பிறகு அவர் மீண்டும் நடக்கத் தொடங்கியவுடன் அவருடன் இருந்த சிறுவன் கௌசிக்கை திடீரென சிறுத்தை ஒன்று தாக்கியது. மேலும், அந்த சிறுத்தை சேஷாசலம் வனப்பகுதிக்குள் சிறுவனை இழுத்துச் செல்ல முயன்றது.



சிறுத்தை சிறுவனை புதருக்குள் இழுத்துச் சென்றது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் கூச்சலிடத் தொடங்கி, சிறுத்தையையும் விரட்ட முற்பட்டனர். இதனால், சிறுத்தை சிறுவனை விட்டுவிட்டு தப்பிச்சென்றது. 



ரத்த வெள்ளத்தில் துடித்த சிறுவன், ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் நல மருத்துவமனைக்கு (TTD) அழைத்துச்செல்லப்பட்டார்.



 




அவரது உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.



மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக சிறுவன் அழைத்துச்செல்லப்பட்ட போது....