கொரோனாவின் இரண்டாவது அலை நாட்டில் தொடர்ந்து அழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவின் அழிவை சமாளிக்க நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் லாக் டவுன் (Lockdown) போடப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், ஆந்திராவில் இருந்து மனதை பதறவைக்கும் சம்பவம் ஒன்று வெளிவந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆந்திர மாநில மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் (Oxygen Crisis) 11 பேர் உயிரிழந்ததுள்ளனர். மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருப்பதியில் (Tirupati) உள்ள ரூய் அரசு மருத்துவமனையில் இரவு 8 மணியளவில் கொரோனா (CoronaVirus) நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செலுத்துவதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் நோயாளிகள் பலர் உயிருக்கு போராடிய நிலையில் உறவினர்களும், மருத்துவப் பணியாளர்களும் செய்வதறியாது தவித்தனர்.


ALSO READ | இந்த தொற்றுநோயால் இதுவரை 8,791 பேர் இறந்துள்ளனர்.


இந்த சம்பவம் காரணமாக 5 நிமிட இடைவெளியில் 11 உயிரிழப்புகள் நேரிட்டதாகக் கூறப்படுகிறது. நிலைமை மோசமான நிலையில் 30-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் நோயாளிகளின் உயிரை காக்க போராடி வருகின்றனர். ஆக்சிஜன் டேங்கர் தற்போது சென்று சேர்ந்துள்ள நிலையில், நிலைமை மேலும் மோசமாகாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சித்தூர் மாவட்ட ஆட்சியர் ஹரிநாரயணன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.


மறுபுறம், ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் -19 புதிய 14,986 தொற்றுகள் பதிவாகியுள்ளன, இது மாநிலத்தில் மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கையை 13,02,589 ஆகக் கொண்டு 13 லட்சங்களைத் தாண்டியுள்ளது. கடந்த 5 நாட்களில், கோவிட் -19 புதிய தொற்றுகள் மாநிலத்தில் பதிவாகியுள்ளன.


திங்கள்கிழமை காலை 9 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேரத்தில் 16,167 நோயாளிகள் தொற்றுநோயிலிருந்து மீண்டதாகவும், 84 நோயாளிகள் இறந்ததாகவும் ஹெல்த் புல்லட்டின் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தொற்றுநோயால் இதுவரை 8,791 பேர் இறந்துள்ளனர்.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR