தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடங்கிய திருப்பதி முன்பதிவு இணையம்
உலகப் புகழ் பெற்ற திருப்பதி திருமலா தேவஸ்தான கோவிலில் கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது
உலகப் புகழ் பெற்ற திருப்பதி திருமலா தேவஸ்தான கோவிலில் கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சமீபத்தில் விதிகளை தளர்த்தியுள்ள தேவஸ்தான நிர்வாகம், பக்தர்களுக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியம் என்றும், சமூக இடைவெளி, மாஸ்க் கட்டாயம் என்றும் கூறியிருந்தது. இந்த நிபந்தனைகளுடன் பக்தர்களுக்கு தரிசன அனுமதி அளிக்கப்பட்டு 300 ரூபாய் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி நாளொன்றுக்கு 5000 பக்தர்களை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு திருமலா கோவிலுக்கான முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே இணையதளம் முடங்கியது.
திருப்பதி வெங்கடாஜலபதியை பல நாட்கள் காணாமல் காத்திருந்த பக்தர்கள் மொத்தமாக முன்பதிவு செய்ய நினைப்பதால் இணையம் முடங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. முடங்கிய சில நிமிடங்களிலேயே இணையதளம் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது. திருமலா தரிசனத்துக்கு முன்பதிவு செய்ய https://tirupatibalaji.ap.gov.in/index.html#/login என்ற இணையதளத்தை பயன்படுத்த தேவஸ்தான நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. முன்பதிவு செய்யாதவர்கள் திருமலைக்கு மேல் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. அக்டோபர் 1ஆம் தேதி முதல் முன்பதிவு தரிசனம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் 31ஆம் தேதி வரை முன்பதிவு செய்யப்படுகிறது.
காலை 10 மணியிலிருந்து மாலை 7 மணி வரை ஒரு மணிநேர இடைவெளியில் முன்பதிவு நடைபெறுகிறது. அதிகபட்சமாக ஒரு கைப்பேசி எண்ணில் 6 பேர் வரை முன்பதிவு செய்யலாம். கூடுதல் லட்டுகளுக்கான தகவலையும் இங்கேயே அளித்து முன்பதிவு செய்துகொள்ளலாம். கூடுதலாக ஒரு லட்டுக்கு ரூபாய் 50 வசூல் செய்யப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR