திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் நிர்வாகிக்கப்படும் கோவில்களில் மிகவும் புகழ்பெற்றது திருமலையில் அமைந்துள்ளது திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில். ஏழுமலையானை தரிசனம் செய்தால், வாழ்க்கையில் வரும் அனைத்து துன்பங்களும் நீங்கி விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருப்பதி சென்று வந்தாலே வாழ்க்கையில் திருப்பம் வரும் என்று கூறுவார்கள். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் கோவில்களின் மிகவும் முக்கியமான கோவில் திருப்பதி ஏழுமலையான் கோயில்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோடை விடுமுறை காலம் துவங்க உள்ளதால் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாட்டின் பல பகுதிகளில் கோடை விடுமுறை தொடங்கியுள்ள போதிலும், திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் சனிக்கிழமை உண்டியல் வருமானம் 2.85 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. கோடை காலத்தில் திருமலைக்கு பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், திருமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காகவும், பக்தர்கள் தரிசனத்திற்காக அதிக நேரம் காத்திருப்பதை குறைப்பதற்காகவும் பல மாற்றங்களை கொண்டு வர திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | திருப்பதி: ஜூலை மாத ஆர்ஜித சேவைக்கான டிக்கெட் இன்று வெளியீடு


கடந்த ஆண்டு ஏப்ரலில் மலைக்கோயிலில் கோவிட்-19 கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு, கிடைத்த உண்டியல் வருமானத்தில், சனிக்கிழமையன்று கிடைத்த உண்டியல் வருமானமான ரூ.2.85 கோடி என்பது, கடந்த ஓராண்டில் கிடைத்த மிகக் குறைந்த உண்டியல் வருமானம் ஆகும். நாட்டின் பல பகுதிகளில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட போதிலும், கடந்த ஒரு வாரமாக திருமலை கோவிலில் பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்தது.


TTD வெளியிட்ட தகவல்களில், கடந்த ஒரு வாரத்தில் திருமலை கோவிலில் பக்தர்கள் வருகை மற்றும் உண்டியல் வசூல் தினசரி சராசரியை விட குறைவாக உள்ளது என்றும், ஏப்ரல் கடைசி வாரத்தில் இருந்து திருமலைக்கு பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என கோயில் அறக்கட்டளை எதிர்பார்க்கிறது எனவும் கூறப்பட்டுள்ளது.


இதற்கிடையில், திருமலை கோவிலில் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு தொடர்பாக பக்தர்களை ஏமாற்றிய தேவஸ்தான் இணையதளம் போல் தோற்றமளிக்கு 41 இணையதளங்களை TTD அறக்கட்டளை மூடியுள்ளது. கோவில் அறக்கட்டளை, அதன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் மட்டுமே தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் ஆலயம் உலகப் புகழ் பெற்ற ஒரு கோவிலாகும். இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் காத்திருக்காமல் குறித்த நேரத்தில் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக தேவஸ்தானம் சார்பில் ஆன்லைன் டிக்கெட்டுகள் மாதந்தோறும் வெளியிடப்பட்டு வருகின்றன. இங்கு இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். 


மேலும் படிக்க | திருப்பதிக்கு பிளானிங்கா? ஏப்ரல் மாதத்திற்கான தரிசன டிக்கெட் வெளியீட்டு தேதி அறிவிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ