திருப்பதி கோயில் சிறப்பு தரிசனம் முன்பதிவு: முழு வழிமுறை இதோ
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
புதுடெல்லி: திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு ஒரு நலல் செய்தி. திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) ஆந்திராவில் உள்ள திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு சிறப்பு நுழைவு தரிசனத்திற்கான டிக்கெட்டுகளை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது.
ரூ .300 விலை கொண்ட டிக்கெட்டுகள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சிறப்பு நுழைவு தரிசனத்திற்காக டிடிடி-யின் (TTD) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விற்கப்படுகின்றன. முன்னதாக ஆன்லைன் முன்பதிவு அக்டோபர் 22 அன்று காலை 9 மணிக்கு தொடங்கியது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்ல உங்கள் டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்கான வழிமுறைகள் இதோ:
1. tiruupatibalaji.ap.gov.in என்ற திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ TTD வலைத்தளத்திற்குச் செல்லவும்.
2. காலை 9 மணிக்குப் பிறகு டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம்
3. முன்பதிவு திறந்தவுடன், "சிறப்பு நுழைவு தரிசன (ரூ .300) டிக்கெட்டுகளை பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும் (Please click here to book Special Entry Darshan (Rs.300) tickets)" என்று குறிப்பிடப்பட்டிருக்கும் இடத்தில் கிளிக் செய்யவும்.
4. தேவையான விவரங்களை பூர்த்தி செய்து கட்டணத்தை செலுத்தவும்.
5. அதன் பிறகு உங்கள் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும்
ALSO READ:திருப்பதி தேவஸ்தானம் கொடுத்த ஷாக்
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும், அல்லது, கோவிட் -19 பரிசோதனை செய்துகொண்டு, தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். இந்த சான்றிதழ் தரிசனம் செய்வதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் பெறப்பட்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சனிக்கிழமை (அக்டோபர் 23) காலை 9 மணிக்கு பக்தர்களுக்கான ஸ்லாடட் சர்வ தரிசனத்திற்கான டிக்கெட்டுகளை வெளியிடும் என்று தெரிவித்துள்ளதாக ஒரு செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம், திருமலைக்கு வருக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கையை ஒரு நாளைக்கு 30,000 க்கும் கீழ் குறைத்துள்ளது.
ALSO READ: TTD: திருப்பதிக்கு காணிக்கையாக கிடைத்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் நிலை என்ன
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR