கொல்கத்தா: டி.எம்.சி தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி மீது நேற்று நடந்த தாக்குதலுக்குப் பிறகு, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களும் எதிர்க்கட்சியான பாஜக தலைவர்களும் இன்று தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திக்கவுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 மாநில அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி தலைமையிலான மூன்று பேர் கொண்ட டி.எம்.சி அமைச்சர்கள் குழு இந்த சம்பவம் குறித்து புகார் பதிவு செய்து முழுமையான விசாரணையை கோரவுள்ளது.


"நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் (Election Commission) பதில் கோரவுள்ளோம். மம்தா பானர்ஜி இந்த மாநிலத்தின் முதல்வர். அவருடையே பாதுகாப்பிலேயே எப்படி பிழை ஏற்பட்டது? வேட்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும்” என்று ஒரு மூத்த டி.எம்.சி தலைவர் கூறினார்.


சாட்டர்ஜியுடன் டி.எம்.சியின் மாநிலங்களவைத் தலைவர் டெரெக் ஓ’பிரையன் மற்றும் மாநில அமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யா ஆகியோரும் இருப்பார்கள்.


முன்னதாக, பல பாஜக மூத்த தலைவர்களின் பல கருத்துக்கள் மம்தா பானர்ஜி தாக்கப்படக்கூடும் என்பதற்கான போதுமான அறிகுறிகளை வெளிக்காட்டியதாகக் கூறிய சாட்டர்ஜி, "அப்படிப்பட்ட கருத்துகள் வெளிவந்த போதும், முதலமைச்சருக்கு முறையான பாதுகாப்பு இல்லை" என்று கூறினார். "தேர்தல் நிர்வாகத்தின் பொறுப்பு தேர்தல் ஆணையத்திடம் இருக்கும்போது, ​​மம்தா பானர்ஜி (Mamata Banerjee) மீதான தாக்குதலுக்கு யார் பொறுப்பேற்பார்கள்? இந்த சம்பவத்திற்கு தேர்தல் ஆணையம்தான் பொறுப்பேற்க வேண்டும்.” என்றார்.


ALSO READ: தில்லியின் மூத்த குடிமக்களுக்கு ‘அயோத்யா தரிசனம்’ நிச்சயம்: Arvind Kejriwal


"தேர்தல் ஆணையம் பாஜக தலைவர்களின் உத்தரவின்படி செயல்படுகிறது. ஒரு அதிகாரியை நீக்குமாறு பாஜக தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக் கொள்கிறது, அவர்களும் அவரை நீக்குகிறார்கள்" என்று அவர் மேலும் கூறினார்.


இந்த சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்தக் கோரி எதிர்க்கட்சியான பாஜகவின் ஒரு குழுவும் தேர்தல் ஆணைய அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளது.


"இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியிடப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இதனால் உண்மையில் என்ன நடந்தது என்பதை மக்கள் அறிந்து கொள்ள முடியும்" என்று ஒரு மாநில பாஜக (BJP) தலைவர் கூறினார்.


மேற்குவங்க முதலமைச்சர் தற்போது கொல்கத்தாவில் உள்ள எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர், இடது கால், இடுப்பு, தோள்பட்டை மற்றும் கழுத்து ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


புதன்கிழமை மாலை நந்திகிராமில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் மம்தா பேனர்ஜி கலந்து கொண்டார். அந்த பிரச்சாரத்தின்போது, நடந்த ஒரு சம்பவத்தில் அவர் காயமடைந்தார். ​​தன்னை நான்கு ஐந்து நபர்கள் தாக்கியதாகவும், தனது காரின் கதவை தன் மீது தள்ளி காயப்படுத்தியதாகவும் மம்தா பேனர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.


ALSO READ: உணர்வுகள் மற்றும் உத்திகளின் கலப்பாக வெளிவந்துள்ளது அதிமுக வேட்பாளர் பட்டியல்!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR