மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் ஏப்ரல் 4-ம் தேதி முதல் மே 5-ம் தேதி வரை நடைபெற்றது. 294 இடங்களை கொண்ட மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் ஆறு கட்டங்களாக நடந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் தனித்தே போட்டியிட்டது. இடதுசாரி கட்சிகளுடேன் காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. மற்றும் பாரதீய ஜனதாவும் போட்டியிட்டன.


இந்த நிலையில் நேற்று 90 இடங்களில் ஓட்டு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. தொடக்க முதலே பெரும்பாலான தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னணி வகிக்க தொடங்கியது.


கடைசியாக 211 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துகொண்டது திரிணாமுல் காங்கிரஸ்.


இடதுசாரி காங்கிரஸ் கூட்டணி 77 இடங்களும், பாரதீய ஜனதா கட்சிக்கு 2 இடங்களும், மற்ற கட்சிகள் 4 இடங்களும் கைப்பற்றின.


மம்தா பானர்ஜி பபானிப்பூர் தொகுதியில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். 



 


 


மம்தா பானர்ஜி நிருபர்களிடம் கூறியது:-


200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம் என்பது எதிர்பார்த்ததுதான். இந்த முறை தனியாக போட்டியிட்டு 200-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி இருக்கிறோம். 2011-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து நாங்கள் போட்டியிட்டு 180 இடங்களை கைப்பற்றினோம். எங்களுக்கும் பாரதீய ஜனதாவுக்கும் இடையே கொள்கையில் வேறுபாடுகள் இருக்கிறது. அவர்களுடன் கூட்டணி சேரமாட்டோம். ஆனால் மக்களுக்கு நலன் தருகிற விஷயங்களை ஆதரிப்போம் என கூறினார்.


வரும் 23ம் தேதி மம்தா பானர்ஜியும் மற்றும் அவரது அமைச்சர்களும் பதவி ஏற்பார் எனவும் என தெரிகிறது.