டெல்லியில் விவசாயிகள் தலைகீழாக நின்று போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும், விளை பொருட்களுக்கு நியாயமான விலை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் தொடர் உண்ணாவிரத போராட்டம் கடந்த மார்ச் மாதம் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு மாதமாக நடைபெற்றது.
அதன்பிறகு தமிழகம் திரும்பிய விவசாயிகள், சில நாட்கள் கழித்து மீண்டும் டெல்லி ஜன்தர்-மன்தர் பகுதிக்கு சென்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 2-ம் கட்ட போராட்டத்தை தொடக்கி இன்றுடன் 56_வது நாளாக போராடி வருகின்றனர்.
இன்று தமிழக விவசாயிகள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி தலைகீழாக நின்றப்படி போராட்டம் நடத்தினார்கள்.