தமிழக முன்னாள் ஆளுநர் டாக்டர். பீஷ்ம நாராயண் சிங் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார்!  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கிய பீஷ்ம நாராயண் சிங் ஜார்க்கண்ட்டில், பலாமு மாவட்டத்தில் பிறந்த காந்தியவாதியான இவர், காங்கிரஸில் இணைந்து 1967-ல் பீகார் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். 1971 ஆம் ஆண்டில் கல்வி அமைச்சராகவும், 1972ல் கனிம வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். 1978 ஆம் ஆண்டு பாராளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் கொறடாவாகவும் பதவி வகித்தார். 


இதையடுத்து, 1980-ல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அமைச்சரவையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் வீ‌ட்டு வச‌தித் துறை அமைச்சராகப் பணியாற்றினார். அஸ்ஸாம் மாநில ஆளுநராக 1984 முத‌ல் 1989 வரை பதவி வகித்தார். பின்னர், 1991-ம் ஆண்டு முதல் தமிழக ஆளுநராகப் பதவி வகித்தார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு முதல் முறையாக தமிழக முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்துவைத்த பெருமை இவரை சேரும். அஸ்ஸாம், தமிழ்நாடு உட்பட சுமார் ஆறு மாநிலங்களுக்கு ஆளுநராகப் பணியாற்றியுள்ளார். 


இந்நிலையில், 85 வயதாகும் இவர், நேற்று (01-08-2018) டெல்லி நொய்டா போர்டிஸ் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார்.