ஏடிஎம்.,ல் பணம் எடுக்க ராகுல் காந்தி பொது மக்களுடன் வரிசையில் நின்றார்
ரூ.500, 1000 நோட்டுக்களை மத்திய அரசு வாபஸ் பெற்றதை அடுத்து, 2 நாள் விடுமுறைக்கு பிறகு இன்று திறக்கப்பட்ட ஏடிஎம்.,களில் நாடு முழுவதும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பணம் எடுத்து வருகின்றனர்.
புதுடெல்லி: ரூ.500, 1000 நோட்டுக்களை மத்திய அரசு வாபஸ் பெற்றதை அடுத்து, 2 நாள் விடுமுறைக்கு பிறகு இன்று திறக்கப்பட்ட ஏடிஎம்.,களில் நாடு முழுவதும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பணம் எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று டெல்லியில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பணத்தை பாராளு மன்ற வீதியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்திய வங்கி ஒன்றில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று 4000 ரூபாய் மாற்றி சென்றார். அப்போது அவருடன் வரிசையில் நின்றவர்கள் ராகுல் காந்தியுடன் செல்பி எடுத்து கொண்டனர்.
மக்களோடு மக்களாக நின்று அவர்களின் துயுரத்தை பகிர்ந்து கொள்ளவே வரிசையில் நின்றேன். மேலும் மக்களின் சிரமத்தை உணர்கிறேன், மத்திய அரசின் இந்த திட்டம் சாமான்யமான மக்களூக்கு பயன்படபோவது இல்லை இது பண்க்காரரகளுக்குதான் பலன் தரும் என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூறினார்.