ஆசியாவின் தலைசிறந்த 50 பல்கலைக்கழகங்களில் பட்டியலில் சென்னை ஐஐடி இடம்பெற்றுள்ளது. கடந்த ஆண்டை 56-வது இடத்தில் இருந்தது. தற்போது 13 இடங்கள் முன்னேறி, இந்த ஆண்டு 43-வது இடத்தை பிடித்துள்ளது. இது தவிர இந்தியாவின் முக்கிய ஐ.ஐ.டி-க்கள் பலவும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆசியாவின் டாப் 50 கல்வி நிறுவனங்களின் பட்டியலில் பெங்களூரு ஐஐஎஸ்சி 33-வது இடமும், மும்பை ஐஐடி 35-வது இடமும், டில்லி ஐஐடி 36-வது இடமும், கான்பூர் ஐஐடி 48--வது இடமும் பெற்றுள்ளன. டாப் 100 பட்டியலில் கரக்பூர் ஐஐடி 51-வது இடமும், ரூர்கி ஐஐடி 78-வது இடமும், கவுகாத்தி ஐஐடி 94--வது இடமும் என இடம்பெற்றுள்ளன.


இவை தவிர அமிர்தா பல்கலைக்கழகம் 169 வது இடத்திலும், ஆந்திரா பல்கலைக்கழகம் 350 வது இடத்திலும் உள்ளன. டில்லி பல்கலைக்கழகம் கடந்த ஆண்டை விட 25 இடங்கள் முன்னேறி 66வது இடத்திலும், கொல்கத்தா பல்கலைக்கழகம் 41 இடங்கள் முன்னேறி 108 வது இடத்திலும் உள்ளன.


17 நாடுகள் இடம்பெற்றுள்ள சிறந்த பல்கலைக்கழகங்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இந்தியா 50வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 


டாப் 350 பல்கலைக்கழகங்களில் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 23 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன.