சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வான சந்திர கிரகணம் இன்று ஏற்படுகிறது. இதை 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் பார்க்க முடியும். இன்று இரவு தோன்றும் சந்திர கிரகணம் ஏறத்தாழ 2 மணி நேரம் நீடிக்கும்.


நிலவின் மீது படவேண்டிய சூரிய ஒளிக்கதிர்களை பூமி மறைத்துக் கொள்ளும் போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த சந்திர 


கிரகணம் இன்று நடக்கிறது. 


இந்த சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று மாலை 4.30 மணி முதல் நடை அடைக்கப்படும். இரவு 10.52 மணி முதல் 12.48 மணி வரை சந்திர கிரகணம் நிகழவுள்ளது. இதனால் இன்று மாலை முதல், நாளை காலை வரை நடை அடைக்கப்பட உள்ளது. 


நாளை அதிகாலை 2 மணிக்கு கோவில் சுத்தம் செய்யப்பட்டு சுப்ரபாதம், தோல்மாலை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்ம ஆராதனைக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். 


இதனால் இன்று விசேஷ பூஜை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்த உற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.