டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. 49 கிலோ எடை மகளிர் பளுதூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை மீராபாய் சானு. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜப்பனில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு வெள்ளியுடன் தனது பதக்க வேட்டையை இந்தியா துவக்கியுள்ளது. 


மீராபாய் சானு, ஸ்னாட்ச், கிளீன் அண்ட் ஜெர்க் ஆகிய இரு பிரிவுகளில் மொத்தம் 202 கிலோ எடையை தூக்கி வெள்ளி வென்றார். சீன வீரர் ஹோ சி ஹூய் 210 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கம் வென்றார். இதில் இரண்டாவது இடத்தை மீராபாய் பெற்றார். 


2000ஆவது ஆண்டில் சிட்னி ஒலிம்பிக் போட்டியில் கர்ணம் மல்லேஸ்வரி வெண்கலம் வென்றிருந்தார். ஒலிம்பிக் வரலாற்றில் பளுதூக்குதல் போட்டியில் இந்தியா இதுவரை 2 பதக்கங்களை வென்றுள்ளது.


மீராபாய் சானுவுக்கு பாராட்டுதல்கள் குவிந்த வண்ண உள்ளன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைத்தள பக்கத்தில் மீராபாயை பாரடடியுள்ளார்.



முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் மற்றும் பலர் மீராபாயை பாராட்டியுள்ளனர் .



உலகில் உள்ள அனைத்து வீரர்களின் உட்சபட்ச கனவு ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வது, பதக்கம் வெல்வது. 2020 ஆம் ஆண்டு நடக்கவிருந்த இப்பெருமைமிகு விளையாட்டு திருவிழா கொரோனா பெருந்தொற்று காரணாமாக ஓராண்டு கழித்து, நேற்று துவங்கியது.  


இந்தியாவில் இருந்து 125 வீரர்கள்:
இந்தியா சார்பில் 125 வீரர்கள் கலந்துக்கொள்கிறார்கள். அதில் நாடு முழுவதிலும் இருந்து 18 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். அதேபோல தமிழ்நாட்டை பொறுத்தவரை முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக வீரர்கள் பங்கேற்கின்றனர். 


தமிழக வீராங்கனை மற்றும் வீரர்கள்:
தமிழக வீராங்கனைகள்:  பவானி தேவி, இளவேனில் வாலறிவன், சுபா வெங்கடேசன், தனலட்சுமி சேகர், ரேவதி வீரமணி ஆவார்கள். 
தமிழக வீரர்கள்: சரத் கமல், சத்யன் ஞானசேகரன், விஷ்ணு, நேத்ரன் குமரன், ஆரோக்கியராஜ், நாகநாதன் பாண்டி உள்ளிட்ட பங்கேற்கின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR