பெண்ணின் வயிற்றில் சிக்கிய பல் துலக்கியை அறுவை சிகிச்சையின்றி நீக்கி மருத்துவர்கள் சாதனை! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஷில்லாங்: 50 வயதான பெண்ணின் வயிற்றில் சிக்கிய பல் துலக்கியை புதன்கிழமை சிவில் மருத்துவமனை அறுவை சிகிச்சையின்றி நீக்கி ஒரு அறிய சாதனையை படைத்துள்ளனர் மருத்துவர்கள். 


கடந்த மாதம் லோவர் மாப்ரெமின் குடியிருப்பை சேர்ந்த பெண் காலையில் பல் துலக்கிகொண்டிருக்கையில், எதிர்பாரா விதமாக பல் துலக்கியை விளுங்கியுள்ளார். இதையடுத்து, அவர் கடந்த சில நாட்களாகவே அவர் உடல்நிலையில் அசௌகரியத்தை உணர்ந்துள்ளார். இதையடுத்து, அவர் அருகில் உள்ள மருத்துவமனையை நாடியுள்ளார். 


அதை தொடர்ந்து,  அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் வயிற்றி பல்துலக்கி இருந்ததை கண்டறிந்துள்ளனர். தொடர்ந்து சிகிச்சையும் கொடுத்து வந்துள்ளனர். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து மருத்துவர்கள் கலந்து ஆலோசித்து, அறுவை சிகிச்சை இன்றி எண்டோஸ்கோபி மூலம் அந்த பல்துலக்கியை அகற்ற முடிவு செய்துள்ளனர். பின்னர், இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அவரது வயிற்றிலிருந்து பல்துலக்கியை நீக்கியுள்ளனர். 


இதுகுறித்து டாக்டர் ஐசக் சியீய் ANI இடம் கூறியபோது, இங்கே எல்லோருக்கும் இது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. தூரிகை அகற்றப்பட்டபின் அவர் நன்றாக இருந்தார். நாங்கள் ஒரு எண்டோஸ்கோப்பைப் பயன்படுத்தி, வாய் வழியாக செலுத்தி மூடிவிட்டோம். செயல்பாட்டில் எந்த அறுவை சிகிச்சை தேவை இல்லை. அரை மணி நேரம் கழித்து மருத்துவமனையில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். "


"மருத்துவ உதவிக்காக அவர் கொண்டு வரப்படவில்லை என்றால் நிலைமை மோசமடைந்துவிடும் என்று சாத்தியங்கள் இருந்தன," என்று அவர் மேலும் கூறினார்.