ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக மோடி அரசு எடுத்த மிகப்பெரிய 5 வரலாற்று முடிவுகள்
இன்று (திங்கள்கிழமை) ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக மோடி அரசு வரலாற்று முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதன் சிறப்புக்கள் என்ன என்பதை பார்ப்போம்.
புதுடில்லி: ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவையும் அமித் ஷா மாநிலங்களவையில் முன்வைத்துள்ளார். அதில் ஐந்து மிகப்பெரிய 5 வரலாற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன
ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக மோடி அரசு வரலாற்று முடிவு ஒன்றை இன்று (திங்கள்கிழமை) எடுத்துள்ளது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டு, காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து, சிறப்பு சட்டம 370வது பிரிவை ஜம்மு-காஷ்மீரில் இருந்து நீக்க முடிவு செய்து அறிவிப்பை வெளியிட்டார். இதனுடன், பிரிவு 35-ஏவும் அகற்றப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவையும் அமித் ஷா மாநிலங்களவையில் முன்வைத்துள்ளார்.
இன்று மோடி அரசு அறிவித்த ஐந்து பெரிய முடிவுகள்.....!!
முதல் முடிவு- ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370 வது பிரிவை நீக்குவதற்கான தீர்மானம் அறிமுகப்படுத்தப்பட்டது
இரண்டாவது முடிவு - ஜம்மு-காஷ்மீரில் இருந்து 35 ஏ பிரிவு முற்றிலும் அகற்றப்பட்டது.
மூன்றாவது முடிவு - ஜம்மு-காஷ்மீர் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது
நான்காவது முடிவு: ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்தை இழந்து, இப்போது ஒரு தனி யூனியன் பிரதேசமாக இருக்கும்
ஐந்தாவது முடிவு - லடாக் இப்போது சட்டசபை இல்லாமல் ஒரு யூனியன் பிரதேசமாக இருக்கும்.