டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு... சிறையில் இருக்கும் ‘டாப்’ தலைவர்கள்!
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், 16 முக்கிய நபர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அமலாக்க துறையினரால், கைது செய்யப்பட்ட முக்கிய அரசியல் தலைவர்களின் பட்டியலை அறிந்து கொள்ளலாம்.
டெல்லி மதுக் கொள்கை ஊழல் வழக்கில், விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை பல முறை சம்மன் அனுப்பிய போதிலும், அவர் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், நேற்று இரவு, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதே மதுபானக் கொள்கை வழக்கில் பிஆர்எஸ் கட்சித் தலைவர் கேசிஆர் மகள் கே.கவிதா கைது செய்யப்பட்டு ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், இப்போது டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2021-22 ஆம் ஆண்டிற்கான டெல்லி அரசாங்கத்தின் கலால் கொள்கையை உருவாக்கி செயல்படுத்துவதில் ஊழல் மற்றும் பணமோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பெயர் பலமுறை குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்திய அறிக்கையில், அமலாக்க இயக்குனரகம் (ED) பிஆர்எஸ் தலைவர் கவிதா மற்றும் பலர் அர்விந்த் கேஜ்ரிவால் (Arvind Kejriwal) மற்றும் சிசோடியா போன்ற முக்கிய ஆம் ஆத்மி பிரமுகர்களுடன் சதி செய்து டெல்லி கலால் கொள்கையில் பெருமளவு ஆதாயம் பெற்றதாக குறிப்பிட்டுள்ளது.
தற்போது ரத்து செய்யப்பட்ட டெல்லி மதுபானக் கொள்கை வழக்கை உருவாக்கும் போது பணமோசடி செய்ததாகக் கூறப்படும் 16 முக்கிய நபர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் சாட்சிகளாக மாறியுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
மணீஷ் சிசோடியா
டெல்லி முன்னாள் துணை முதல்வரும், அரவிந்த் கெஜ்ரிவாலின் நெருங்கிய உதவியாளருமான மணீஷ் சிசோடியாவை இந்த வழக்கில் கடந்த 2023 பிப்ரவரி 26ம்தேதி அன்று, சிபிஐ முதலில் கைது செய்து. பின்னர், அவரை 2023 மார்ச் மார்ச் 9ம் தேதி அன்று ED கைது செய்தது.
மேலும் படிக்க | டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது... அமலாக்கத்துறை அதிரடி - அடுத்தது என்ன?
சஞ்சய் சிங்
மதுபான் கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங், 2023 அக்டோபர் 4ம் தேதி அன்று கைது செய்யப்பட்டார். மதுபானக் கொள்கை வழக்கில் ED யால் கைது செய்யப்பட்டதையும் சிங் சவால் செய்திருந்தார்.
கவிதா கல்வகுண்ட்லா
பிஆர்எஸ் தலைவரும், தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகளுமான கவிதா கல்வகுந்த்லா, கடந்த மார்ச் 15ம் தேதி அன்று ஹைதராபாத்தில் ED யால் கைது செய்யப்பட்டு டெல்லிக்கு அழைத்து வரப்பட்டார். 2021-22 ஆம் ஆண்டுக்கான டெல்லி கலால் கொள்கையில் செல்வாக்கு செலுத்துவதை நோக்கமாகக் கொண்ட 'சவுத் குரூப்' எனப்படும் மதுபான வியாபாரிகளின் லாபியுடன் தொடர்பில் இருந்தார் என்று அமலாக்க இயக்குநரகம் (ED) கூறியது.
அரவிந்த் கெஜ்ரிவால்
கவிதா கைது செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நேற்று, அதாவது, 2024 மார்ச் 21ம் தேதி அன்று அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டார். தில்லி முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் சுமார் மூன்று மணி நேரம் விசாரணைக்குப் பிறகு அமலாக்கத் துறை அவரை கைது செய்தது.
சத்யேந்தர் ஜெயின்
ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சத்யேந்தர் ஜெயின், 2022 மே மாதத்தில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட முதல் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2017 ஆகஸ்ட் மாதம், சிபிஐ ஜெயின் மற்றும் ஐந்து பேர் மீது ஊழல் குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்தது. 2010-12 மற்றும் 2015-16 ஆண்டுகளில் மூன்று நிறுவனங்கள் மூலம் பணமோசடி செய்ததாக ஜெயின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆம் ஆத்மியின் உயர்மட்டத் தலைவர்கள் இப்போது சிறையில் இருப்பதால், கட்சி கடுமையான தலைமை நெருக்கடியை எதிர்கொள்கிறது.
மேலும் படிக்க | உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் லிஸ்ட்! இந்தியாவிற்கு எந்த இடம் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ