ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கி தாக்குதலில் போலீஸ்காரர் ஒருவர் பலியானார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காஷ்மீரின் டிரால் என்ற பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். 


இதனையடுத்து அங்கு போலீசார் மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் போலீஸ் ஒருவர் பலியானார். தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான வீரர் மன்சூர் அஹமது என தெரியவந்தது.
 
தொடர்ந்து போலீசார் நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவன், கொல்லப்பட்ட தீவிரவாதி புர்ஹான் வானியிடம் பயிற்சி பெற்றவன் என்பது தெரியவந்தது.