மீண்டும் CBI இயக்குநர் பதவில் இருந்து அலோக் வர்மா அதிரடி நீக்கம்...
CBI இயக்குநர் பதவில் இருந்து அலோக் வர்மா நீக்கம்; பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் முடிவு...
CBI இயக்குநர் பதவில் இருந்து அலோக் வர்மா நீக்கம்; பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் முடிவு...
CBI இயக்குநராக இருந்த அலோக் வர்மாவுக்கு இணையாக சிறப்பு இயக்குநர் என்ற பதவியில் ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல்களை அடுத்து, அலோக் வர்மாவை கட்டாய விடுமுறையில் செல்லுமாறு மத்திய அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து, இந்த உத்தரவை எதிர்த்து அலோக் வர்மா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட அலோக் வர்மா, CBI இயக்குநராக நீடிக்கலாம் என்று கூறி மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்து உச்சநீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து 77 நாட்கள் விடுப்பபுக்கி பின்னர் நேற்றைய முன் தினம் அவர் மீண்டும் CBI இயக்குநராக பதவி ஏற்றுக்கொண்டார்.
உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து CBI இயக்குநர் பதவிக்கு திரும்பிய அலோக் வர்மா, தனது ஆதரவு அதிகாரிகளை இடமாற்றி இயக்குநர் பொறுப்பு வகித்த நாகேஷ்வர ராவ் பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்தார். மேலும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளையும் அவர் இடமாற்றம் செய்தார்.
இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதிலாக பங்கேற்ற நீதிபதி A.N.சிக்ரி அடங்கிய மூவர் குழுவின் ஆலோசனை நடைபெற்றது. அலோக் வர்மா நீக்கத்திற்கு மல்லிகார்ஜூன கார்கே, எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பிரதமர் மோடியும், நீதிபதி சிக்ரியும் ஆதரவு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பெரும்பான்மை முடிவு என்கிற வகையில், CBI-யின் இயக்குநர் பதவியில் இருந்து அலோக் வர்மாவை மாற்றுவது என்று முடிவு எடுக்கப்பட்டது.
இது குறித்து CVC அளித்த அறிக்கையின்படி, அலோக் வர்மாவுக்கு எதிரான 10 புகார்களே அவர் மீண்டும் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு காரணமாக கூறப்படுகிறது. இவற்றில் 3 புகார்களுக்கு ஆதாரம் உள்ளது. 6 புகார்களுக்கு ஆதாரம் இல்லை. ஒரு புகாருக்கான ஆதாரத்தின் நம்பகத்தன்மை பல்வேறு மாறுபாடுகளை கொண்டதாக உள்ளது. அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டுக்களில் முக்கியமானது, CBI விசாரணை வளையத்தில் இருந்த தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து ரூ.2 கோடி லஞ்சம் பெற்றது தான்.
இதே போன்று IRCTC வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் மீது FIR பதிவு செய்யாமலும், ஒழுங்கு நடவடிக்கை போன்ற நடவடிக்கைகளில் தப்பிக்கு வகையில் விலக்கு அளித்தது, டில்லி விமானநிலையத்தில் தங்கம் கடத்தல் வழக்கில் நடவடிக்கை எடுக்க தவறியது ஆகியனவே அலோக் வர்மாவுக்கு எதிராக மத்திய தேர்வுக்குழு முடிவு எடுக்க முக்கிய காரணங்களாகும். இந்த குற்றச்சாட்டுக்கள் மீது விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம். சில வழக்குகளில் கிரிமினல் விசாரணை உள்ளிட்டவைகளும் நடத்தப்பட வேண்டி உள்ளது. இதனால் CBI தலைவர் பதவியில் அலோக் வர்மா தொடர்ந்தால் இந்த விசாரணை நடப்பது சாத்தியமற்றது என்ற காரணத்தினாலேயே அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வருகிற 31 ஆம் தேதி அன்று பணியில் இருந்து ஓய்வு பெற உள்ள நிலையில் CBI இயக்குநர் பதவியில் இருந்து அலோக் வர்மா நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.